தமிழை நீதிமன்ற மொழியாக்காவிட்டால் மக்கள் போராட்டம் வெடிக்கும் - பழ. நெடுமாறன் எச்சரிக்கை !
சென்னை: குடியரசுத் தலைவர் கோவை வருவதற்கு முன்பு நீதிமன்ற மொழியாக தமிழை ஆக்கும் சட்டத்தில் கையெழுத்திடவேண்டும். இல்லையேல் மக்கள் போராட்டம் வெடிக்கும் என்று மக்கள் உரிமைக் கூட்டமைப்பின் அமைப்பாளர் பழ. நெடுமாறன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை உயர்நீதி மன்ற வளாகத்திற்குள் உண்ணா நோன்பு போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் வழக்கறிஞர்களை பழ. நெடுமாறன் சந்தித்து அவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தார்.
பின்னர் ஒரு அறிக்கையை பத்திரிகைகளிடம் வழங்கினார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:
உயர்நீதி மன்றத்தில், தமிழ் நீதிமன்ற மொழியாக உடனடியாக ஆக்கப்படவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, மதுரையில் கடந்த 10 நாட்களாக வழக்கறிஞர்கள் நடத்திவரும் சாகும் வரையிலான உண்ணா நோன்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், சென்னை வழக்கறிஞர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் வழக்கறிஞர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
கடந்த 2006 ம் ஆண்டில் தமிழக சட்டமன்றத்தில் இதற்கானத் தீர்மானம் அனைத்துக்கட்சி ஆதரவுடன் ஒரேமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால் கடந்த நான்காண்டு காலமாக இதில் குடியரசுத் தலைவர் கையெழுத்திட்டு ஒப்புதல் அளிக்கவில்லை.
மத்திய அரசில் தி.மு.க.வும் ஓர் அங்கம். தி.மு.க. அமைச்சர்களும் இதுகுறித்து குடியரசுத் தலைவரைச் சந்தித்து வற்புறுத்தவில்லை. ஆனால் கோவையில் நடைபெறவிருக்கும் உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டினைத் தொடக்கி வைக்க குடியரசுத் தலைவர் அழைக்கப்பட்டிருக்கிறார்.
அவர் இந்த மாநாட்டிற்கு வருவதற்கு முன்பாக உயர்நீதிமன்றத்தில் தமிழை நீதிமன்ற மொழியாக ஆக்கும் சட்டத்திற்கு ஒப்புதல் அளித்துவிட்டு வரவேண்டும்.
இல்லையேல் வழக்கறிஞர்களின் போராட்டம் மக்கள் போராட்டமாக வெடிக்கும் என எச்சரிக்கிறேன்.
-இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications