சென்னை-கால்வாயில் மூழ்கி 2 வயது குழந்தை பலி
சென்னை: சென்னையில் கால்வாயில் மூழ்கி 2 வயதுக் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
சென்னை எம்.ஜி.ஆர்.நகர் சூளை பள்ளம் நாவலர் காலனியைச் சேர்ந்தவர் வடிவேல். லாரி டிரைவராக இருக்கும் இவரது மனைவி வரலட்சுமி. இவர்களுக்கு ஷர்மிளி (2) உள்பட இரண்டு குழந்தைகள் உள்ளன.
கழிவு நீர்க் கால்வாயை ஒட்டி வடிவேலின் வீடு உள்ளது. நேற்று முன்தினம் இரவு ஷ்ர்மிளி அருகில் உள்ள ஆட்டோவில் ஏறி விளையாடிக் கொண்டிருந்தாள். வடிவேலி டிவி பார்த்துக் கொண்டிருந்தார், தாயார் வரலட்சுமி சமைத்துக் கொண்டிருந்தார்.
இந்த நிலையில் சிறுமி ஷர்மிளி கால்வாயில் விழுந்து விட்டாள்.இதை யாரும் பார்க்கவில்லை. சிறிது நேரம் கழித்து குழந்தையைக் காணாமல்அங்குமிங்கும் தேடியுள்ளனர். குழந்தை காணாமல் தவித்த தாயும்,தந்தையும் போலீஸில் புகார் கொடுத்தனர். அப்போது அவர்களுக்கு குழந்தை கால்வாயில் விழுந்திருக்கலாம் என சந்தேகம் வந்து போலீஸிடம் கூற, தீயணைப்புப் படையினர் விரைந்து வந்தனர்.
50 தீயணைப்புப் படையினர் கால்வாயில் இறங்கி தீவிரமாக தேடினர். இரவு முழுவதும் தேடியதில் குழந்தை கிடைக்கவில்லை. இந்த நிலையில் இன்று காலை ஷர்மிளியின் உடல் கால்வாயில் ஒதுங்கியது.
இதையடுத்து போலீஸார் விரைந்து வந்து உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
கழிவு நீர்க் கால்வாயில் விழுந்து குழந்தை பலியான சம்பவம் அப்பகுதி மக்களை வேதனையில் ஆழ்த்தியது.
-
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications