காஷ்மீரின் சில பகுதிகளில் ஊரடங்கு தளர்வு-கல்வீசிய 30 பேர் கைது

ஊரடங்கின் கீழ் வைக்கப்பட்டுள்ள காஷ்மீர் பள்ளத்தாக்கின் சில பகுதிகளில் ஊரடங்கு தளர்த்தப்பட்டது. இருப்பினும் மக்கள் நடமாட்டம் பெருமளவில் இல்லை. அதேபோல செய்தித் தாள்களும் வரவில்லை.
ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பகுதிளுக்குச் செல்ல பத்திரிக்கையாளர்களுக்கு பாஸ் வழங்க காஷ்மீர் நிர்வாகம் மறுத்ததோடு, வழங்கப்பட்டபாஸ்களையும் ரத்து செய்தது. மேலும் இரண்டு பத்திரிக்கையாளர்களும் தாக்கப்பட்டனர். இதையடுத்து காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதிகளுக்கு பத்திரிக்கைகளை அனுப்புவதில்லை என்று பத்திரிக்கைகள் முடிவு செய்துள்ளன. இதனால் ஒரு நாளிதழ் கூட இன்று அங்கு வரவில்லை.
இதற்கிடையே, புலவாமா மாவட்டத்தில் ககபோரா பகுதியில் நேற்று மாலை ஒரு கும்பல் பாதுகாப்புப் படையினர் மீது தாக்குதல் நடத்தியது. இதில் பொதுமக்கள் ஐந்து பேரும், 16 பாதுகாப்புப் படையினரும் காயமடைந்தனர்.
சோபூர் பகுதியில் தொடர்ந்து ஊரடங்கு அமலில் உள்ளது.
பாதுகாப்புப் படையினர் மீது கல்வீசியவர்களை தொடர்ந்து போலீஸார் பிடித்து வருகின்றனர். இதுவரை 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications