சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட 30 ஆந்திர எம்.எல்.ஏக்கள் மகாராஷ்டிராவில் கைது
நான்டெட், மகாராஷ்டிரா: தடை உத்தரவை மீறி மகாராஷ்டிரா மாநிலம் நான்டெட் பகுதிக்குள் செல்ல முயன்ற தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு, 30 ஆந்திர மாநில எம்.எல்.ஏக்கள், 8 எம்.பிக்கள் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
மகாராஷ்டிர மாநிலம் நான்டெட் பகுதியில் கோதாவரி ஆற்றின் குறுக்கே மகாராஷ்டிர அரசு பாப்லி அணையை கட்டி வருகிறது. இதற்கு ஆந்திரா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இந்த நிலையில் அணைப் பகுதிக்குச் சென்று பணிகளைத் தடுக்கும் போராட்டத்தை அறிவித்திருந்தார் நாயுடு. இதையடுத்து மகாராஷ்டிர எல்லையில் போலீஸார் குவிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் பஸ் யாத்திரை மூலம் மகாராஷ்டிர எல்லையை வந்தடைந்த நாயுடு உள்ளிட்ட தெலுங்கு தேசம் எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் குழுவினர் நான்டெட்டுக்குள் நுழைந்தபோது அவர்களை மகாராஷ்டிர போலீஸார் தடுத்து நிறுத்திக் கைது செய்தனர்.
முன்னதாக மகாராஷ்டிராவுக்குள் நுழைந்து அமைதியைக் குலைக்க முயன்றால் நாயுடு உள்ளிட்டோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மகாராஷ்டிர உள்துறை அமைச்சர் ஆர்.ஆர்.பாட்டீல் கடும் எச்சரிக்கை விடுத்திருந்தார். ஆனால் தடையை மீறி நாயுடு உள்ளிட்டோர் மகாராஷ்டிராவுக்குள் நுழைந்ததால் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications