இலங்கை தமிழர்கள் சுயமரியாதையுடன் வாழ நடவடிக்கை: கருணாநிதிக்கு பிரதமர் கடிதம்

இலங்கைத் தமிழர் மறுவாழ்வு குறி்த்து பிரதமருக்கு கருணாநிதி எழுதிய கடிதத்துக்கு பிரதமர் அனுப்பியுள்ள பதிலில்,
இலங்கையில் தமிழ் சிறுபான்மை மக்கள் நிலைகுறித்து கடந்த ஜூலையில் தாங்கள் எழுதிய கடிதத்திற்கு பெரிதும் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
இலங்கை அதிபருடன் கடந்த மாதம் பேச்சுவார்த்தை நடத்தியதுடன் அண்மையில் இலங்கை நாடாளுமன்றத்தைச் சேர்ந்த தமிழ் தேசிய கூட்டணி உறுப்பினர்கள் தூது குழுவும் என்னை சந்தித்து பேசியது.
இலங்கையில் தமிழர்கள் சுயமரியாதையுடனும், கெளரவத்துடனும் வாழ்வதற்குரிய நடவடிக்கைகளை மத்திய அரசு உறுதியாக மேற்கொள்ளும் என்பதை தெரிவித்து கொள்கிறேன்.
போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்கள் வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் விரைவில் குடியமர்த்தப்பட தேவையான நடவடிக்கைகளை எடுக்க இந்திய அரசு வலியுறுத்தும்.
இதற்காக இந்திய அரசு ஏற்கனவே ரூ. 500 கோடி நிதியுதவி அளிக்க உறுதி அளித்துள்ளது. மேலும் போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 50,000 வீடுகளை கட்டித் தருவதற்கு உதவி அளிக்கவும் இந்தியா உறுதி அளித்திருக்கிறது.
மேலும் தேவையான அடிப்படை வசதிகள் செய்து அவர்களிடம் பொருளதாரரீதியாக இயல்பு நிலையை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி அளித்து கொள்கிறேன்.
மேலும் நீண்டகாலமாக வலியுறுத்தப்பட்டு வரும் அரசியல்ரீதியாக இனப் பிரச்சனைக்கு தீர்வு காண உங்களுடைய கருத்துக்களையும் ஆலோசனைகளையும் வழங்க வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன் என்று கூறப்பட்டுள்ளது.
இலங்கையில் தமிழர்கள் மீது தாக்குதல்:
இந் நிலையி் இலங்கையில் மணல் திருட்டை தடுக்க முயன்ற தமிழர்கள் மீது சிறப்பு அதிரடிப்படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில், தாழங்குடா அருகேயுள்ள வேடர் குடியிருப்பு கடற்கரையில் சட்டவிரோதமான முறையில் மணல் திருட்டு நடைபெற்று வந்ததாகவும், இதைத் தடுக்க முயன்ற தமிழர்கள் மீது சிறப்பு அதிரடிப் படையினரும் அவர்களுடன் இணைந்து செயல்படும் டிஎம்விபி கட்சியினரும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
மணல் திருட்டில் ஈடுபட்ட இரு வாகனங்களை அப்பகுதி தமிழ் மக்கள் சூழ்ந்து கொண்டு வழிமறித்ததால், ஆத்திரமடைந்த சிறப்பு அதிரடிப்படையினர் அவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications