போலி பாஸ்போர்ட் வைத்திருந்த கேரள இளைஞர் கோவையில் கைது
கோவை: போலி பாஸ்போர்ட்டில் துபாயில் இருந்து கோவை வந்த கேரள நபரை பீளமேடு போலீசார் கைது செய்தனர்.
கேரள மாநிலம், காசரகோடு தெற்கில் கிராமத்தைச் சேர்ந்தவர் அப்துல் முத்தலிப் மொய்தீன். இவர் துபாயில் பணியாற்றி வருகிறார்.
இவர் நேற்று முன்தினம் ஷார்ஜா விமானம் மூலம் கோவை வந்தார். அப்போது, விமான நிலையத்தில் குடியுரிமைப் பிரிவு இன்ஸ்பெக்டர் கோபால கிருஷ்ணன் தனது குழுவினருடன் சோதனையில் ஈடுபட்டிருந்தார். அப்துல் முத்தலிப் பாஸ்போர்ட்டை சோதித்த அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இதனையடுத்து, குடியுரிமை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டதில், கடந்த 1990-ம் ஆண்டு துபாயில் உள்ள இந்திய தூதரகம் மூலம் போலி முகவரி கொடுத்து, பாஸ்போர்ட் புதுப்பிக்கப்பட்டது தெரிய வந்தது.
இதனால், போலி முகவரி கொடுத்து பாஸ்போர்ட் பெற்ற அப்துல் முத்தலிப்பை பீளமேடு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.












Click it and Unblock the Notifications