காவல் நிலையங்களை தாக்க மாவோ நக்சலைட்கள் சதி திட்டம்: விசாரணையில் திடுக் தகவல்
திருவனந்தபுரம்: கேரளாவில் காவல் நிலையங்களைத் தகர்க்க நக்சலைட்டுகள் திட்டமிட்டிருப்பது தெரிய வந்துள்ளது.
கேரளாவில் நிலம்பூர் உள்ளிட்ட சில பகுதிகளில் மாவோயிஸ்ட் நக்சலைட் இயக்கத்துக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுவதாக அம்மாநில உளவுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் மாநிலம் முழுவதும் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த பகுதியில் பதுங்கி இருந்த சினிக், சசிதரன் என்ற 2 நக்சலைட்டுகளை எர்ணாகுளம் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் வயநாடு உள்ளிட்ட பகுதிகளில் நக்சலைட்டுகள் தங்கள் இயக்கத்துக்கு ஏராளமான ஆட்களை சேர்த்துள்ளனர் என்பது தெரிய வந்தது.
கேரளாவில் உள்ள அனைத்து மாவட்டங்களில் இருந்தும் இவர்கள் ஆட்களை தேர்வு செய்துள்ளனர். அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு தீவிர பயிற்சியும் அளித்துள்ளனர். மேலும், அவர்கள் காவல் நிலையங்களை தாக்க சதி திட்டம் தீட்டியுள்ளனர்.
நிலம்பூரில் ரயிலின் பிரேக்கை துண்டித்த சதியிலும் இவர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். விசாரணைக்கு பிறகு இருவரும் நிலம்பூர் நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை 14 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications