பாகிஸ்தான் ராணுவ தளபதி கயானிக்கு 3 ஆண்டு பதவி நீட்டிப்பு

Subscribe to Oneindia Tamil

Kayani
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் ராணுவத்தின் தலைமை தளபதி அஷ்பக் பர்வேஸ் கயானியின் பதவிக் காலம் மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

58 வயதான கயானியின் பதவிக் காலம் வரும் நவம்பருடன் நிறைவடைய இருந்தது. இந் நிலையில் கயானியின் பதவிக் காலத்தை 2013ம் ஆண்டு வரை நீட்டித்து அந்நாட்டுப் பிரதமர் யூசுப் ரஸா கிலானி உத்தரவிட்டுள்ளார்.

கயானி தலைமையில் பயங்கரவாதத்துக்கு எதிராக நடைபெறும் போர் இன்னும் நிறைவடையாததால் அவருக்கு இந்தப் பதவி நீட்டிப்பு அளிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் கிலானி தெரிவித்தார்.

அதிபர் ஆசிப் அலி ஜர்தாரியின் ஆலோசனைப்படியே இந்த பதவி நீட்டிப்பதற்கான முடிவு எடுக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். ஆனால், அமெரிக்காவின் ஆலோசனைப்படியே அவருக்கு பதவி நீட்டிப்பு அளிக்கப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது.

முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் ராணுவத் தலைமைத் தளபதி பதவியை விட்டு இறங்க நிர்பந்திக்கப்பட்டபோது அவரால் தளபதியாக நியமிக்கப்பட்டவர் கயானி என்பது குறிப்பிடத்தக்கது முஷாபுக்கு நெருக்கமாகவும், நம்பிக்கைக்குரியவருமாக இருந்த இவர், , முஷாரபுக்கு எதிராக ஜனநாயகரீதியில் போராட்டம் வெடித்தபோது நடுநிலைமை வகித்தது குறிப்பிடத்தக்கது.

கயானிக்கு பதவி நீட்டிப்பு அளிக்கப்பட்டுள்ளதால் ராணுவத்தில் அவருக்கு அடுத்த நிலையில் உள்ள மூன்று நட்சத்திர அதிகாரியான காலித் ஷமீமின் பதவி உயர்வு பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அவருக்கும்
தலைமைத் தளபதிக்கு இணையான பதவி அளிக்கப்படலாம் என்று தெரிகிறது.

கயானி ராணுவத் தலைமை தளபதியான பின்னர் தான் ஸ்வாட் ஸ்வாத், தெற்கு வஜீர்ஸ்தான் பகுதிகளை தீவிரவாதிகள் கட்டுப்பாட்டில் இருந்து ராணுவம் மீட்டது.

பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐயின் தலைவராகவும் இவர் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சியாச்சினில் இருந்து படைகள் வாபஸ்-ஜர்தாரி யோசனை:

இந் நிலையில் சியாச்சின் பனிப் பகுதியில் இருந்து படைகளை இந்தியா-பாகிஸ்தான் திரும்பப் பெற வேண்டும் என்று பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி ஜர்தாரி கோரியுள்ளார்.

அமெரிக்காவின் டெய்லி டைம்ஸ் பத்திரிகைக்கு அவர் அளித்துள்ள பேட்டி:

சியாச்சினில் இந்தியாவும், பாகிஸ்தானும் படைகளை நிறுத்தி, இரு நாடுகளும் ஏராளமான பணத்தை செலவழித்து வருகின்றன.

இரு நாடுகளும் சியாச்சினில் இருந்து படைகளை வாபஸ் பெற்றுக் கொண்டால் இந்தப் பணம் முழுவதும் மிச்சமாகும். இதை இரு நாடுகளும் வளர்ச்சித் திட்டங்களுக்கு பயன்படுத்தலாம். இரு நாடுகளுக்கு இடையே நீடிக்கும் எல்லைப் பிரச்சனையை சுமூகமாகப் பேசித் தீர்த்துக் கொள்ளலாம் என்று கூறியுள்ளார்.

அமெரிக்க ஏவுகணை தாக்குதலில் 18 தீவிரவாதிகள் பலி:

இதற்கிடையே பாகிஸ்தானில் அமெரிக்கப் படைகள் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 18 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

தெற்கு வஜீர்ஸ்தான் பகுதியில் அங்கூர் அடா பகுதியில் தீவிரவாதிகள் முகாம் மீது அமெரிக்காவின் ஆளில்லா உளவு மானங்கள் 5 ஏவுகணைகளை ஏவி இந்தத் தாக்குதலை நடத்தின.

பாகிஸ்தானில் அமெரிக்க ராணுவத் தலைவர்:

இந் நிலையில் அமெரிக்க ராணுவத் தலைவர் மைக் முல்லென் பாகிஸ்தான் வந்துள்ளார். பாகிஸ்தான் ராணுவ உயர் அதிகாரிகளை அவர் சந்தித்து பேச்சு நடத்தி வருகிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+