For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஐ.ஆர்.சி.டி.சி. இணையத்தளம் மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு நிறுத்தம்-ரயில்வே இணையத்தில் வாங்கலாம்

By Chakra
Google Oneindia Tamil News

India Train
டெல்லி: ஐ.ஆர்.சி.டி.சி. (IRCTC) இணையத் தளம் மூலம் ரயில் டிக்கெட் விற்பதை நிறுத்த இந்திய ரயில்வே முடிவு செய்துள்ளது.

இனி தனது ரயில்வே இணையத் தளம் மூலமே இ-டிக்கெட்டுகளை விற்க திட்டமிட்டுள்ளது.

ரயில்களிலும், ரயில் நிலையங்களிலும் பயணிகளுக்கு உணவு வழங்கும் பொறுப்பை, ஐ.ஆர்.சி.டி.சி. நிறுவனம் மேற்கொண்டு வந்தது.

மேலும் ஐ.ஆர்.சி.டி.சியின் இணையத் தளம் மூலம் தான் ரயில்வே இ-டிக்கெட்டுகளும் விற்கப்பட்டு வருகின்றன. ரயில்வேயின் மொத்த முன்பதிவில் 30 சதவீத புக்கிங் இதன் மூலம் தான் நடந்து நடக்கிறது. இதன் மூலம் ஆண்டுக்கு ரூ. 122 கோடி அளவுக்கு இந்த நிறுவனத்துக்கு லாபம் கிடைத்து வருகிறது.

இந் நிலையில் இந்த நிறுவனத்தின் உணவின் தரத்திலும், வினியோகத்திலும் பல குறைகள் கூறப்பட்டதால், சமீபத்தில் ரயில்களில் உணவு வினியோகிக்கும் பொறுப்பை ஐ.ஆர்.சி.டி.சியிடம் இருந்து ரயில்வே துறை எடுத்துக் கொண்டு, பின்னர் வேறு ஒரு தனியார் நிறுவனத்திடம் ஒப்படைத்தது.

இப்போது இந்த நிறுவனம் மூலமாக டிக்கெட் முன் பதிவையும் ரயில்வே ரத்து செய்யவுள்ளது.

இது குறித்து ரயில்வே உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், அதிகாலையில் ஐஆர்சிடியின் இணையத் தளம் மூலமாக இ-டிக்கெட் எடுப்பது மிகவும் சிரமமாக உள்ளதாகவும்,

ஐ.ஆர்.சி.டி.சியின் ஏஜெண்டுகள் தட்கல் புக்கிங் டிக்கெட் முன்பதிவில் முறைகேடுகளில் ஈடுபட்டு வருவதாகவும் புகார் வந்துள்ளது.

எனவே அந்த அஜென்டுகளின் உரிமம் ரத்து செய்யப்பட்டுளளது.

விரைவில் இ-டிக்கெட் முன் பதிவுப் பணியை ஐ.ஆர்.சி.டி.சியிடம் இருந்து ரயில்வே துறையே எடுத்துக் கொள்ளலாமா என்று ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

இந்தத் திட்டத்தை வரும் செப்டம்பர் மாத இறுதிக்குள் அமல்படுத்துவது பற்றி யோசித்து வருகிறோம்.

ரயில்வேயின் கம்ப்யூட்டர் தொழில்நுட்பப் பிரிவு (Centre for Railways Information Systems-Cris), இ-டிக்கெட் விற்பனையை கையாளத் தயாராக உள்ளது.

மேலும் இனிமேல் ஆன்லைன் டிக்கெட் முன்பதிவை 23.30 மணி நேரம அனுமதிக்கவும் ரயில்வே திட்டமிட்டுள்ளது. மிச்சமுள்ள அரை மணி நேரம் சர்வர்கள் பராமரிப்புப் பணிக்காக ஒதுக்கப்படும் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X