பெல்காம்-காமன்வெல்த்: நாடாளுமன்றத்தில் அமளி; கர்நாடக-மகாராஷ்டிர எம்பிக்கள் மோதல்
டெல்லி: பெல்காம் மாவட்டம் தொடர்பாக கர்நாடகம்- மகாராஷ்டிர மாநிலங்களுக்கு இடையே பிரச்சனை இருந்து வருகிறது.
இன்று இந்தப் பிரச்சனை நாடாளுமன்றத்தில் எதிரொலித்தது.
காலை மக்களவை தொடங்கியதும், மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த அனைத்து எம்.பிக்களும், கட்சி வேறுபாடியின்றி பெல்காம் மாவட்டம் மராட்டியத்திற்கே சொந்தம் என்று கோஷம் எழுப்பினர். இதில் பிரதமர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எழுதப்பட்ட பேனர்களையும் காட்டியபடி அவையல் மையப் பகுதிக்கு வந்து கோஷம் போட்டனர்.
அவர்களுக்குப் போட்டியாக கர்நாடக பாஜக எம்.பிக்கள் எதிர் கோஷம் போட்டதால் பெரும் அமளி ஏற்பட்டது. இதையடுத்து அவையை சபாநாயகர் ஒத்தி வைத்தார்.
மீண்டும் அவை கூடியதும் விலைவாசி உயர்வு மீதான விவாதத்தை தொடங்கி வைத்து பாஜக தலைவர் சுஷ்மா சுவராஜ் பேசினார்.
அதே போல ராஜ்யசபாவில் பகுஜன் சமாஜ் கட்சி உறுப்பினர்களால் பெரும் அமளி ஏற்பட்டு அவை இருமுறை ஒத்தி வைக்கப்பட்டது.
டெல்லி அரசு தாழ்த்தப்பட்ட மக்கள் நலனுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை காமன் வெல்த் விளையாட்டுப் போட்டிகளுக்கு ஒதுக்குவதாகக் கூறி பகுஜன் சமாஜ் கட்சி எம்.பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவாக இடதுசாரிக் கட்சி எம்பிக்களும் அமளியில் ஈடுபட்டதால் அவை ஒத்தி வைக்கப்பட்டது.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications