தூத்துக்குடி கல்லூரி மாணவர்கள் மோதல்-7 கிராமங்களில் பதற்றம்
ஏரல்: தூத்துக்குடி மாவட்டத்தில் கல்லூரி மாணவர்கள் மோதலால் 7 கிராமங்களில் தொடர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்ட ஏரல் பெருங்குளம் கிராமம் உள்ளது. இக்கிராமத்தை சேர்ந்த மாணவர்கள் சிலர் சாயர்புரம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகின்றனர். இவர்கள் தினமும் கல்லூரிக்கு பேரூந்தில் செல்வது வழக்கம்.
இதே பேரூந்தில் அருகிலுள்ள கிராமப்புற மாணவர்களும் கல்லூரிக்கு சென்று வருகின்றனர். இதில் கல்லூரியில் ஏற்பட்ட முன்விரோதத்தினால் பெருங்குளம் மாணவர்களுக்கும், பண்டாரவிளை மாணவர்களுக்கும் இடையே பேரூந்தில் வைத்து மோதல் ஏற்பட்டு இரு தரப்பும் மோதி கொண்டதில் பண்டரவிளை மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த சம்பவத்தில் ஈடுபட்ட பண்டராவிளையை சேர்ந்த 4 மாணவர்களை கைது செய்த ஏரல் போலீசார் மேலும் 7 பேர் மீது வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர்.
கல்லூரி மாணவர்கள் மோதலில் பாதிக்கப்பட்டவர்கள் மீது போலீஸ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறி பண்டாரவிளை, பண்னைவிளை, புதூர், வன்னியனுர் உள்ளிட்ட 7 கிராம மக்கள் கொதித்தெழுத்து ஊரின் ஆலய மணிகளை அடித்து மக்களை திரட்டி பண்டாவிளையில் சாலையில் சுமார் 1000 பேர் திரண்டு வந்து அமர்ந்து பஸ் மறியலில் ஈடுபட முயன்றனர். அவர்களிடம் அதிகாரிகள் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தொடர்ந்து அப்பகுதிகளில் பதட்டம் நிலவுவதால் 300க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் வர்த்தக நிறுவனங்கள், பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால் ஊரே வெறிச்சேடி காணப்படுகிறது.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications