ஐரோப்பா, மேற்கு ஆப்ரிக்காவை குறிவைக்கும் ரஸ்னா!
'ரஸ்னா... எப்பவுமே' என்று விளம்பரத்தில் கண்ணடிக்கும் பாப்பா ரேஞ்சுக்கு சின்ன நிறுவனம் என்று பலரும் எண்ணிக் கொண்டிருக்கும் ரஸ்னா, இன்று கிட்டத்தட்ட ரூ 325 கோடி வர்த்தகம் கொண்ட பெரிய நிறுவனமாக வளர்ந்து நிற்கிறது.
இந்த ஆண்டு ஐரோப்பா மற்றும் மேற்கு ஆசியாவிலும் கால் பதிக்கிறது ரஸ்னா.
பெரிய, சிறிய நகரங்கள், கிராமங்கள் என்ற பேதமின்றி எங்கும் ஏழைகளின் குளிர்பானமாக வியாபித்துள்ளது ரஸ்னா. நுகர்வோர் சந்தையில் இந்த நிறுவனத்தின் தயாரிப்புக்கு நல்ல மவுசு உள்ளது. ஏற்கெனவே 35 நாடுகளுக்கு இதன் தயாரிப்புகள் ஏற்றுமதியாகின்றன. அமெரிக்கா, தென் ஆப்ரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள் போன்றவை இதில் அடக்கம்.
இந்த ஆண்டு தனது வர்த்தக அளவை ரூ 400 கோடிக்கு மேல் உயர்த்த முடிவு செய்துள்ள ரஸ்னா, ஐரோப்பா மற்றும் மேற்கு ஆப்ரிக்க நாடுகளிலும் தனது விற்பனையை விஸ்தரிக்கிறது. இந்த நாடுகளில் மட்டும் 20 சதவீதத்துக்கும் அதிகமாக விற்பனை செய்ய முடியும் என இந்நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
ரஸ்னா துணைத் தலைவர் கிரீஷ் ஜாக்கி கூறுகையில், "தயார் நிலையில் உள்ள குளிர்பானம் தவிர, ஊறுகாய், சட்னி வகைகள், ஜாம், தயார் நிலையில் உள்ள உணவுப் பொருள்கள் போன்றவற்றையும் ரஸ்னா தயாரிக்கிறது. ஆனால் இவற்றை இந்திய மார்க்கெட்டில் விற்கும் திட்டம் இப்போதைக்கில்லை. முழுக்க முழுக்க ஏற்றுமதி நோக்கில்தான் இவை தயாரிக்கப்படுகின்றன.
இன்னொன்று, நம் நாட்டில் முன் தயாரிக்கப்பட்ட உணவுகளை விற்பது சாதாரண விஷயமில்லை. இடத்துக்கு இடம் மக்களின் ரசனை, சுவை மாறுகின்றன. எனவே அதற்கேற்ப தயாரித்து விற்பதில் பல சிக்கல்கள் உள்ளன. ஆனால் வெளிநாடுகளில் ஒரே மாதிரி சுவை கொண்டவர்களாக இருப்பது எங்களைப் போன்றவர்களுக்கு வசதியாக உள்ளது" என்றார்.
அடுத்து 'ரஸ்னா குளுக்கோஸ் பிளஸ்' என்ற பெயரில் சத்துப் பானத்தை அறிமுகப்படுத்துகிறது ரஸ்னா.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications