அமெரிக்காவில் தெருவில் விழுந்த விமானம்-ஒருவர் பலி, 3 பேர் படுகாயம்
Subscribe to Oneindia Tamil

இதுகுறித்து லாஸ் வேகாஸ் நகர போலீஸ் தலைவர் ஜான் ஷெகான் கூறுகையில், பைபர் செரோகி என்ற அந்த ஒற்றை என்ஜின் பொருத்தப்பட்ட வி்மானத்தில் 2 ஆண்டுகளும், 2 பெண்களும் இருந்தனர். அந்த விமானம் ஹென்டர்சன் நகரில் உள்ள வீதியில் திடீரென விழுந்து உடைந்து தீப்பற்றி எரிந்தது.
இதில் வி்மானத்தில் இருந்த ஒருவர் உயிரிழந்தார். மற்ற 3 பேரும் காயமடைந்தனர். அதிர்ஷ்டவசமாக தெருவில் சென்ற யாரும் இதில் சிக்கவில்லை. இது பெரும் ஆச்சரியமாக உள்ளது.
பைலட் மிகத் திறமையாக விமானத்தை இறக்க முயற்சித்துள்ளார். இதன் காரணமாகவே வீடுகள் மீது விழாமல் தெருவில் விமானம் விழுந்துள்ளது என்றார்.
ஒரு வீட்டுக்குப் பின்புறம் விமானம் விழுந்து தீப்பிடித்துக் கொண்டது. இதில் விமானத்தின் வால் பகுதியைத் தவிர மற்றவை எரிந்து போய் விட்டன.












Click it and Unblock the Notifications