அயோத்தி வழக்கு: தீர்ப்பு எதுவாக இருந்தாலும் ஏற்போம்-பாஜக

Subscribe to Oneindia Tamil

அலகாபாத்: ராமர்ஜென்மபூமி-பாபர் மசூதி இருக்கும் இடம் யாருக்குச் சொந்தம் என்பது தொடர்பான வழக்கில் எந்த மாதிரியான தீர்ப்பு வந்தாலும் அதை பாஜக ஏற்கும். நீதிமன்றத்தின்உத்தரவை மதிக்கும் என்று பாஜக கூறியுள்ளது.

இம்மாத இறுதியில் இந்த முக்கிய வழக்கில் தீர்ப்பு வெளியாகவுள்ளது. இதையடுத்து உ.பி. மட்டுமல்லாமல் நாடு முழுவதும் பரபரப்பு நிலவுகிறது. உ.பியில் கலவரம் வெடிக்கலாம் என்று அம்மாநில அரசு கவலையுடன் உள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன.

இந்த நிலையில் தீர்ப்பு குறித்து பாஜக தேசிய துணைத் தலைவர் கல்ராஜ் மிஸ்ரா கூறுகையில், எங்களது நிலைப்பாடு தெளிவானது. அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ கிளை அயோத்தி இடம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பாக எந்த வகையான தீர்ப்பை அளித்தாலும் அதை நாங்கள் ஏற்போம். நீதிமன்றத் தீர்ப்புக்காக ஆவலுடன் காத்திருக்கிறோம்.

அயோத்தியில் தற்போதைய இடத்தில் ராமர் கோவில் இருந்ததா, இல்லையா என்ற சந்தேகமே யாருக்கும் வரத் தேவையில்லை என்றார் மிஸ்ரா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+