ஜார்க்கண்ட்டில் ஆட்சியமைக்க சிபு சோரனுடன் கூட்டணி-மகா அதிருப்தியில் அத்வானி

அத்வானி மட்டுமல்லாமல் மேலும் பல மூத்த பாஜக தலைவர்களும் கூட இந்த விஷயத்தில் கடும் அதிருப்தி அடைந்துள்ளனராம்.
அத்வானிதான் இதில் கடும் கோபமாக உள்ளாராம். ஆட்சியமைப்பதற்காக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் ஆதரவை நாடியது ஏற்றுக் கொள்ளவே முடியாது என்று கூறுகிறாராம் அத்வானி. இதனால், நாளை நடைபெறும் அர்ஜூன் முண்டா பதவியேற்பு விழாவில் அத்வானி கலந்து கொள்ள மாட்டார் என்று கூறப்படுகிறது.
அதேபோல ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவுடன் பாஜக இணைந்துள்ளதற்கு அருண் ஜெட்லி, சுஷ்மா சுவராஜ் ஆகியோரும் கூட ஆதரவளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
ஒரு வேளை ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் ஆதரவுடன் பாஜக ஆட்சியமைத்தால், யஷ்வந்த் சின்ஹாவையே முதல்வராக்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தாராம் அத்வானி. ஆனால் கத்காரியோ, தனது விசுவாசியான அர்ஜூன் முண்டாவை முதல்வராக்க தீர்மானித்து விட்டார். அதேபோல ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவும், சின்ஹாவை முதல்வராக்க எதிர்ப்பு தெரிவித்ததால் முண்டாவுக்கு அடித்தது லக்கி பிரைஸ்.
இந்தக் கூட்டணியைத் தவிர வேறு வழியில்லை என்று கட்சித் தலைவர் நிதின் கத்காரி, முன்னாள் தலைவர் ராஜ்நாத் சிங் ஆகியோர் கூறியுள்ளனராம்.
மொத்தத்தில் ஜார்க்கண்ட் ஆட்சியமைப்பு விவகாரத்தால் பாஜக முகாம் பிளவுபட்டுள்ளது.












Click it and Unblock the Notifications