வாகனக் கடன் வழங்க யூகோ வங்கி-டொயோடா ஒப்பந்தம்

டொயோடா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனத்தின் வாகனங்களுக்கு நிதி வழங்குபவர்களில் யூகோ வங்கியும் ஒன்று. இந்த புரிந்து கொள்ளல் ஒப்பந்தத்தில் வங்கியி்ன் சில்லரை பாங்கிங் மற்றும் கார்பரேட் தொடர்பின் தலைவர் எஸ். கே. டே பர்கயஸ்தாவும், டொயோடா கிர்லோஸ்கர் மோட்டார்சின் விற்பனைப் பிரிவு தலைவர் சைலேஷ் ஷெட்டியும் கையெழுத்திட்டனர்.
டொயோடா கிர்லோஸ்கர் மோட்டார் கார்சின் பிரதான நிதி வழங்குபவராக யூகோ வங்கி வழங்கும். மேலும், தகுதியுள்ளவர்களுக்கு நிதி அளிக்கும். இந்த ஒப்பந்தத்தால் வங்கியின் வாகனக் கடன் பிரிவு வளர்ச்சி அடையும் என்று யூகோ வங்கியின் சேர்மனும், மேனேஜிங் டைரக்டருமான அருண் கௌல் தெரிவித்தார்.
இதனால் வங்கியின் மற்ற தயாரிப்புகளையும் நாடு முழுவதும் டொயோடா கார் வாங்குபவர்களுக்கு விற்பனை செய்யலாம். மேலும், வங்கியின் சில்லறை வியாபாரமும், வாடிக்கையாளர்களும் அதிகரிக்கும் என்று அவர் தெரிவித்தார்.
வங்கி கார் கடன் திட்டத்தில் உள்ள போட்டியை சமாளிக்க இந்த தயாரிப்பில் சில மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளது. சந்தையில் அனைவரையும் கவரும் வகையில் வட்டி விகிதமும் குறைக்கப்பட்டுள்ளது என்று யூகோ வங்கியின் எக்சிகியூட்டிவ் டைரக்டர் அஜய் குமார் தெரிவித்தார்.
இது குறித்து டொயோடா கிர்லோஸ்கர் மோட்டார்சின் விற்பனைப் பிரிவு தலைவர் சைலேஷ் ஷெட்டி கூறியதாவது,
யூகோ வங்கியுடன் ஒப்பந்தம் செய்வதில் டொயோடா பெருமிதம் கொள்கிறது. இதனால் வாடிக்கையாளர்கள் நன்மை அடைவார்கள். சந்தை விரிவடையும் இந்த நேரத்தில் நாங்கள் எடுத்துள்ள இந்த நடவடிக்கையால் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த மற்றும் சுலபமாக நிதி கிடைக்கும் என்று அவர் கூறினார்.