தயாளு அம்மாளின் அண்ணி படம்-திறந்து வைத்தார் கருணாநிதி
திருவாரூர் : திருவாரூரில் இன்று நடந்த நிகழ்ச்சியில் மனைவி தயாளு அம்மாளின் அண்ணியார் படத்தை முதல்வர் கருணாநிதி திறந்து வைத்தார்.
திருவாரூர் மாவட்ட வேளாண்மை விற்பனை குழு தலைவராக இருப்பவர் தட்சிணாமூர்த்தி. இவர் முதல்வர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாளின் அண்ணன் ஆவார்.
தட்சிணாமூர்த்தியின் மனைவி தனம் அம்மாள் கடந்த மாதம் 23-ந்தேதி திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகேயுள்ள கோவில் திருமாளத்தில் காலமானார். அவரது உருவப்பட திறப்பு நிகழ்ச்சி இன்று நடந்தது.
இதில் கலந்து கொள்ள கருணாநிதி சென்னையில் இருந்து கார் மூலம் புறப்பட்டு புதுச்சேரி, கடலூர், வழியாக சிதம்பரத்துக்கு நேற்று இரவு வந்தார். அங்கு பல்கலைக்கழக விருந்தினர் மாளிகையில் தங்கினார்.
இன்று காலை அங்கிருந்து புறப்பட்டு கொள்ளிடம், மயிலாடுதுறை வழியாக கோவில் திருமாளத்துக்கு வந்தார். அங்கு, தட்சிணாமூர்த்தியின் குடும்பத்தினர் கருணாநிதியை வரவேற்றனர்.
பின்னர் தனம் அம்மாளின் உருவப் படத்தை திறந்து வைத்து மாலை அணிவித்து கருணாநிதி அஞ்சலி செலுத்தினார். பின்னர், வீட்டு முன்பு தி.மு.க. கொடியை கருணாநிதி ஏற்றி வைத்தார்.
பின்னர் திருவாரூருக்கு கருணாநிதி காரில் சென்றார். அங்கு பயணியர் மாளிகையில் அவர் ஓய்வு எடுக்கிறார்.
ஓய்வை முடித்துக் கொண்ட பின்னர் மாலையில் கார் மூலம் நாகை செல்கிறார். அங்கு காடம்பாடியில் 6 மணிக்குக் தொடங்கும் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார்.
காடம்பாடியில் நாகை மாவட்ட கலைஞர் அறிவாலயத்துக்கும் கருணாநிதி அடிக்கல் நாட்டுகிறார்.
நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு இரவு திருவாரூரில் தங்குகிறார் கருணாநிதி. பின்னர் நாளை காலை கார் மூலம் மீண்டும் சென்னை திரும்புகிறார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications