பிற கட்சிகளுக்கு உதவுவதை விட்டு விட்டு முதல் இயக்கமாக காங். வர வேண்டும்-வாசன்
திருச்சி: பிறகட்சிகளின் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் இயக்கமாக காங்கிரஸ் இருக்கிறது. இதை மாற்றி வருங்காலத்தில் முதல் இயக்கமாக வர வேண்டும். அதற்கு அடிப்படையில் காமராஜரின் உழைப்பும், மூப்பனாரின் வழிகாட்டுதலின்படி வளமான தமிழகத்தை உருவாக்குவோம் என்றார் வாசன்.
திருச்சி பொதுக் கூட்டத்தில் ஜி.கே.வாசன் பேசுகையில்,
சென்னையில் கடலை பார்த்து இருக்கிறோம். திருச்சியில் சீறிவரும் காவிரியை தான் பார்த்து இருக்கிறோம். இன்று கடலை பார்க்கிறோம். இது வருகிற நாட்களில் காங்கிரஸ் பேரியக்கம் முதல் இயக்கமாக வருவதற்கு அடித்தளமான கூட்டம். மலைக்கோட்டையில் லட்சக்கணக்கானோர் கூடி இருப்பதால், நமது லட்சியத்தை அடையும் கூட்டம்.
நம்மால் எதையும் சாதிக்க முடியும் என்பதை காட்டுகிற கூட்டம். காங்கிரஸ் பேரியக்கம் தமிழகத்தில் எதற்கும் சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபிக்கும் கூட்டம். லட்சக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்களே, நிர்வாகிகளே, மத்திய அமைச்சர்களே, உள்ளாட்சி அமைப்பு நண்பர்களே உங்கள் அனைவருக்கும் எனது வணக்கத்தை தெரிவித்து கொள்கிறேன்.
4-வது முறையாக காங்கிரசில் தலைவராக தேர்வாகி, முதல் முறையாக தமிழகத்துக்கு வந்து உள்ளீர்கள். உங்களை காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவராக மட்டும் பார்க்கவில்லை. இந்தியாவின் பாதுகாவலராகவே பார்க்கிறோம்.
ராகுல்காந்தியை காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளராக மட்டும் பார்க்கவில்லை. வருகிற காலத்தில் புதிய இந்தியாவை உருவாக்கும் ராஜீவ்காந்தியின் மறுபிறப்பாக பார்க்கிறோம். அதற்கு எடுத்துக்காட்டாக 50 சதவீத இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் இந்த கூட்டத்துக்கு வந்து உள்ளார்கள்.
திருநாவுக்கரசர் ஆதரவாளர்களுடன் இந்த இயக்கத்தில் சேர்ந்தது மிக்க மகிழ்ச்சிக்குரியது. அவரை வரவேற்று ஆதரவளிப்போம். பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் நல்ல அரசாக செயல்படும் மத்திய அரசு வருகிற நாட்களில் இந்தியாவை வல்லரசாக மாற்றும். கிராமங்கள் தோறும் நமது திட்டங்கள் அனைத்தும் பறைசாற்றப்பட வேண்டும்.
காங்கிரஸ் பேரியக்கம் 43 வருட காலம் ஆட்சி பீடத்தில் இல்லாவிட்டாலும், இன்றும் உயிரோட்டமான இயக்கமாக இருப்பதற்கு தொண்டர்களாகிய நீங்கள் தான் காரணம். நமது கட்சிக்கு ஒரு சிறப்பு இருக்கிறது. பிறகட்சிகளின் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் இயக்கமாக காங்கிரஸ் இருக்கிறது. இதை மாற்றி வருங்காலத்தில் முதல் இயக்கமாக வர வேண்டும். அதற்கு அடிப்படையில் காமராஜரின் உழைப்பும், மூப்பனாரின் வழிகாட்டுதலின்படி வளமான தமிழகத்தை உருவாக்குவோம் என்றார் வாசன்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications