அமெரிக்க பொருளாதாரம் வளர்ச்சி நடை போடுகிறது: அதிபர் ஒபாமா
வாஷிங்டன்: தங்கள் கட்சி ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் பயனாக தற்போது அமெரிக்காவின் பொருளாதாரம் வளர்ச்சி அடைந்து வருகிறது என்று அதிபர் ஒபாமா தெரிவித்தார்.
தற்போது வேலை வாய்ப்புகளும் அதிக அளவில் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இது குறித்து அமெரிக்க அதிபர் ஒபாமா கூறியதாவது,
நான் பதவியேற்றபோது அமெரிக்க பொருளாதாரம் சுருங்கிக் கொண்டிருந்தது. ஆனால் தற்போது வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. கடந்த 9 மாதங்களாக தனியார் துறையில் வேலை வாய்ப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது.
மாநில மற்றும் உள்ளாட்சித் துறைகளில் பெரும் அளவில் வரி வருவாய் குறைந்ததையடுத்து அங்கு ஆட்கள் குறைப்பு நடந்துள்ளது.
அதனால் ஆசிரியர்கள், தீயணைப்பு வீரர்கள் மற்றும் காவலர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டார்கள். கடந்த மாதம் அரசுத் துறையில் தான் அதிகமானோர் பணி நீக்கம் செய்யப்பட்டனர் என்று அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications