தாமிரப் பொருட்களில் இரிடியம் இருப்பதாக கூறி மோசடி-2 பேர் கைது
களக்காடு: களக்காட்டில் பழங்கால தாமிர பொருட்களில் இரிடியம் இருப்பதாக ஏமாற்றி மோசடி செய்ய முயன்ற இருவர் கைது செய்யப்பட்டனர்.
நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள மாவடியை சேர்ந்தவர் ஸ்டீபன். இவர் கடந்த 27-10-2010ம் தேதி சாமி சிலையை கடத்த முயன்றபோது களக்காட்டில் கைது செய்யப்பட்டார்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சாமி சிலையை மாவடியை சேர்ந்த டிரைவர் கலைச்செல்வன் தன்னிடம் தந்ததாக அவர் தெரிவித்தார். இதையடுத்து கலைசெல்வனை பிடிக்க எஸ்பி அஸ்ரா கர்க் உத்தரவின் பேரில் களக்காடு சப்-இன்ஸ்பெக்டர் தர்மராஜ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று கலைச்செல்வனையும், அவரது நண்பர் சிங்கப்பட்டியை சேர்ந்த கணேசன் என்பவரையும் தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து தாமிரத்திலான பூ வாளி உள்ளிட்ட பழங்கால வீட்டு உபயோக பொருட்கள் கைப்பற்றப்பட்டன.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் கோபுர கலசம் மற்றும் பழங்கால தாமிர பொருட்களில் பேட்டரி மற்றும் எலக்ட்ரானிக் சாதனங்களை பொருத்தி இரிடியம் இருப்பதாக கூறி ஏமாற்றி பல கோடி ரூபாய்க்கு அவற்றை விற்க முயன்றது தெரிய வந்தது.
கலைசெல்வனை போதை பொருள் கடத்திய வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்டவர். கணேசன் எல்ஐசி ஏஜென்டாக உள்ளார். இவர்களுடன் தொடர்புடைய தென்காசி நன்னகரத்தை சேர்ந்த தனியார் நிறுவன மேலாளர் ஜெயராஜ் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications