For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சர்வதேச கண்டனத்தைத் தொடர்ந்து கல்லடிக்குப் பதில் தூக்கில் போடப்படும் ஈரான் பெண்

Google Oneindia Tamil News

Sakineh Mohammadi Ashtiani
டெஹ்ரான்: சர்வதேச அளவில் கடும் கண்டனங்கள், எதிர்ப்புகள் எழுந்ததைத் தொடர்ந்து ஈரான் பெண் சகினே முகம்மதி அஷ்தியானிக்கு கல்லால் அடித்து மரண தண்டனையை நிறைவேற்றுவதற்குப் பதில் தூக்கிலிட்டு தண்டனையை நிறைவேற்ற ஈரான் அரசு உத்தரவிட்டுள்ளது.

கள்ளக்காதல் தொடர்பாக கைதானவர் இந்தப் பெண்மணி. இவரை கல்லால் அடித்து மரண தண்டனையை நிறைவேற்ற ஈரான் கோர்ட் உத்தரவிட்டது. இதையடுத்து உலகம முழுவதும் கடும் கண்டனங்கள் எழுந்தன.

இதையடுத்து தற்போது அஷ்தியானிக்கு தூக்குத் தண்டனையாக மரண தண்டனை மாற்றப்பட்டுள்ளது.

தப்ரியாஸ் நகரில் உள்ள சிறைச்சாலையில் இன்று தண்டனை நிறைவேற்றப்படவுள்ளதாக ஜெர்மனியைச் சேர்ந்த மனித உரிமை அமைப்பு ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

மரண தண்டனை நிறைவேற்றப்படவுள்ளதைத் தொடர்ந்து தனது கடைசி ஆசையை அஷ்தியானி சிறை நிர்வாகிகளிடம் தெரிவித்தார் என்றும் கடைசி முறையாக தனது அறையில் அடைக்கப்பட்டுள்ள பெண் கைதிகளை சந்தித்து அவர்களை கட்டித் தழுவி விடை பெற்றார் என்றும் அத்தகவல் கூறுகிறது.

கள்ளக்காதல் கொண்டு தனது கணவரைக் கொலை செய்ததாக இந்தப் பெண் மீது குற்றம் சாட்டப்பட்டு தண்டனை தரப்பட்டுள்ளது. இவருக்கு இரு குழந்தைகள் உள்ளனர். ஆனால் தனது தாயார் கள்ளக்காதலில் ஈடுபடவில்லை என்று அவரது மகன் திட்டவட்டமாக கூறியிருந்தார். இருப்பினும் அதை கோர்ட் ஏற்கவில்லை.

ஏற்கனவே அஷ்தியானிக்கு கோர்ட் தீர்ப்புப்படி 99 சவுக்கடிகள் கொடுக்கப்பட்டு முதல் தண்டனை நிறைவேற்றப்பட்டு விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X