தமிழகத்தில் ஐ.டி. துறை அபார வளர்ச்சி!-அமைச்சர் பூங்கோதை
சென்னை: தகவல் தொழில்நுட்பத் துறையில் தமிழகம் அபார வளர்ச்சி பெற்றுள்ளதாக அந்த துறையின் அமைச்சர் டாக்டர் பூங்கோதை கூறினார்.
மேலும் மென்பொருள் ஏற்றுமதியிலும் குறிப்பிடத்தக்க வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
சென்னையைச் சேர்ந்த கேரியர் ஒன் சொல்யூஷன்ஸ் இந்தியா நிறுவனம் வடிவமைத்துள்ள, வேலை வாய்ப்புகள் குறித்த தகவல்களையும், வேலை பெறுவதற்கான திறன்களையும் இலவசமாக வழங்கக்கூடிய 'கேரியர் பிளாட்டினம்' என்ற இணைய தளத்தை செவ்வாய்க்கிழமை அறிமுகம் செய்துவைத்தார் அமைச்சர் பூங்கோதை.
பின்னர் அவர் பேசுகையில், "தகவல் தொழில்நுட்பத் துறையில் தமிழகம் அபார வளர்ச்சி பெற்றுள்ளது. 2005-06-ம் ஆண்டில் ரூ 30 ஆயிரத்து 500 கோடி மதிப்பில் இருந்த மென்பொருள் ஏற்றுமதி, 2009-10ம் ஆண்டில் ரூ 36 ஆயிரத்து 755 கோடியாக உயர்ந்துள்ளது.
தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் எண்ணிக்கை தமிழகத்தில் உயர்ந்திருப்பதே இதற்கு காரணம். 2005-06ம் ஆண்டில் 1,275-ஆக இருந்த தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் எண்ணிக்கை 2009-10-ல் 1,731-ஆக உயர்ந்துள்ளது. சிறப்பு பொருளாதார மண்டலங்களின் ஏற்றுமதியும் கணிசமாக உயர்ந்துள்ளது. இத்துறையை மேம்படுத்த தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் மூலம், வேலைவாய்ப்புகளும் பெருகியுள்ளன.
கேரியர் ஒன் சொல்யூஷன்ஸ் இந்தியா நிறுவனம் சரியான நேரத்தில் இந்த இணைய தளத்தை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம், வேலைக்காக காத்திருப்போர், சம்பந்தப்பட்ட வேலைக்கான தகுதியை வளர்த்துக்கொள்ள முடியும் என்றார்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications