ரவிசங்கர் மீதான வழக்கு நவ 24-ம் தேதிக்கு ஒத்திவைப்பு: சிறையில் அடைப்பு
நெல்லை: எம்.எல்.ஏவாக இருந்து பின்னர் கொள்ளையனாக மாறிய ரவிசங்கர் மீதான வழக்கு நவம்பர் 24ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
விளாத்திகுளம் முன்னாள் எம்.எல்.ஏ. ரவிசங்கர், எம்.எல்.ஏ.வாக இருந்த காலத்தில் விளாத்திகுளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கித் தலைவராகவும் இருந்தார். அப்போது வங்கியில் ரூ.18 லட்சம் மோசடி செய்ததாக தூத்துக்குடி வணிக புலனாய்வு குற்றப்பிரிவு போலீசார் வங்கி தலைவர் ரவிசங்கர் உள்பட 4 பேர் மீது 3 வழக்கு பதிவு செய்தனர்.
கடந்த 2004-ம் ஆண்டு ஆகஸ்ட் 31-ம் தேதி போலீசார் ரவிசங்கரை விசாரணைக்கு ஆஜர்படுத்த நெல்லைக்கு கொண்டு வந்தபோது போலீசாரிடம் இருந்து தப்பி தலைமறைவானார். இதனால் அவரது வழக்கு நிலுவையில் இருந்தது. மற்றவர்கள் மீதான வழக்கு முடிந்தது.
இந்நிலையில் சென்னையில் வருமான வரித்துறை அதிகாரி போல் நடித்து கொள்ளையடிக்க முயன்றபோது ரவிசங்கர் போலீசில் சிக்கினார். கூட்டுறவு வங்கி மோசடி வழக்கில் கடந்த வாரம் நெல்லை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
நேற்று மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்காக புழல் சிறையி்ல் இருந்து ரவிசங்கரை அழைத்து வந்து நெல்லை 2வது மாஜிஸ்திரேட் ராபின்சன் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். அப்போது சாட்சியங்கள் அடிப்படையில் அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது.
அதன்பின்னர் வழக்கு வரும் 24-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. போலீசாரிடம் தப்பி சென்ற வழக்கில் முதலாவது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ரவிசங்கரை போலீசார் ஆஜர்படுத்தினர். அப்போது நீதிபதி ராஜேஷ் கண்ணன் வரும் 24-ம் தேதி வரை ரவிசங்கரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டதை அடுத்து சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications