ஜெ.வுக்கு கதவு மூடப்பட்டு விட்டதாக காங்கிரஸ் கூறி விட்டது-கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

Karunanidhi
சென்னை: அமைச்சர் ராஜா விவகாரத்தில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தெரிவித்த ஆட்சிக்கு ஆதரவு என்ற கருத்தை காங்கிரஸ் நிராகரித்து விட்டதாக முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ஆங்கிலத் தொலைக்காட்சிகளுக்கு அவர் அளித்த பேட்டி..

2ஜி ஸ்பெக்ட்ரம் பிரச்சினையில் தி.மு.க.வின் நிலை என்ன?

முதல்வர் கருணாநிதி - மத்திய அமைச்சர் ராசாவைப் பொறுத்தவரை, அவர் குற்றவாளி அல்ல. பிரமோத் மகாஜன் அமைச்சராக இருந்தபோதும்; அருண் ஷோரி அமைச்சராக இருந்தபோதும், டெண்டர் விடப்படவில்லை; அவர்கள் எந்த முறையைப் பின்பற்றினார்களோ - தொடர்ந்து அதே முறைதான் 2ஜி ஸ்பெக்ட்ரத்திலும் பின்பற்றப்பட்டிருக்கிறது. முதலில் வந்தவருக்கு முதலில் என்ற முறை தொடர்ந்து பின்பற்றப்பட்டிருக்கிறது. யாருக்கும் தவறாக கொடுத்து விடவில்லை.

தலைமை கணக்குத் தணிக்கை அதிகாரியின் அறிக்கையில், மத்திய அமைச்சர் ராசா மீது குற்றம் சாற்றியிருப்பதாகச் சொல்லப்படுகிறதே?

முதல்வர் கருணாநிதி - அந்த அறிக்கை முழுமையாக வெளிவந்த பிறகுதான் எந்தக் கருத்தையும் சொல்ல முடியும். தலைமை கணக்குத் தணிக்கை அதிகாரி யாரைப் பற்றியும் குறை சொல்லலாம்.ஆனால்,அதுவே இறுதியானதென்று எடுத்துக் கொள்ள முடியாது. ஒருவரைப் பழி வாங்க வேண்டுமென்பதற்காக, யாரும் தற்குறியாக இருந்துவிடக் கூடாது.

ஜெயலலிதா வலிய வந்து காங்கிரசுக்கு ஆதரவு கொடுத்திருக்கிறாரே?

முதல்வர் கருணாநிதி - ஜெயலலிதாவுக்கு கதவு மூடப்பட்டு விட்டதாக - காங்கிரஸ் தரப்பில் பதில் சொல்லி விட்டார்களே! என்றார் முதல்வர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+