For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எதியூரப்பா ஒரு வெட்கம் கெட்ட மனிதர், ஊழல் பெருச்சாளி-கெளடா பாய்ச்சல்

Google Oneindia Tamil News

டெல்லி: கர்நாடக முதல்வர் எதியூரப்பா ஒரு ஊழல் பெருச்சாளி. வெட்கமே இல்லாத மனிதர் என்று கடுமையாக சாடியுள்ளார் முன்னாள் பிரதமரும், மதச்சார்பற்ற ஜனதாதள தலைவருமான தேவே கெளடா.

இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், எதியூரப்பாவுக்கு எதிராக ஏராளமான ஊழல் குற்றச்சாட்டுக்கள் வந்தபோதும் அவர் அதைப் பற்றி சற்றும் கவலைப்படவில்லை. தன் மீதான குற்றச்சாட்டுக்களுக்குப் பதில் சொல்வதை விட்டு விட்டு மற்ற கட்சிகள் குறித்து குறை கூறி வருகிறார்.

பாஜகவுக்கு கொஞ்சமாவது வெட்கம், சூடு, சொரணை இருந்தால், முதலில் எதியூரப்பா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எதியூரப்பா சுத்தமாக வெட்கம் கெட்டவராக இருக்கிறார். எனது 60 ஆண்டு கால அரசியல் வாழ்க்கையில், இந்த அளவுக்கு ஊழல் புரிந்த, ஊழல் குற்றச்சாட்டுக்களுக்கு ஆளான ஒருவரைப் பார்த்ததே இல்லை.சரியான ஊழல் பெருச்சாளியாக இருக்கிறார் எதியூரப்பா என்று சாடியுள்ளார் கெளடா.

English summary
JD (S) chief H D Deve Gowda today said the BJP should think about the various corruption allegations against Karnataka Chief Minister B S Yeddyurappa before pointing fingers at other political parties.
 "If BJP has any sense of shame it will first act against its own chief minister who is facing so many corruption charges", the former Prime Minister told reporters in Delhi. "The Chief Minister is totally shameless. It is for the first time in 60 years of politics I have come across a chief minister facing a slew of charges ranging from corruption to nepotism", the JD(S) chief said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X