ஜட்டி, பிரா மட்டும் அணிந்து வந்து ஷாப்பிங்-ஸ்பெயினில் வினோதம்!

இந்த நிறுவனம் ஸ்பெயினின் பல்வேறு நகரங்களில் ஏராளமான கடைகளை நடத்தி வருகிறது. குளிர்கால ஷாப்பிங் ஸ்பெயினில் தற்போது தொடங்கியுள்ளது. இந்த குளிர்கால ஷாப்பிங்கை வித்தியாசமாகவும், அதேசமயம், அதிக விற்பனையைக் காணும் வகையிலும் நடத்த முடிவு செய்த டெசிகுவல் நிறுவனம் வித்தியாசமான ஒரு அறிவிப்பை வெளியிட்டது.
தனது நிறுவனக் கிளைகளில் முதல் நாள் விற்பனை இலவசம். முதலில் வரும் 100 பேருக்கு இந்த சலுகை. ஒரே ஒரு நிபந்தனை மட்டுமே. ஷாப்பிங் செய்ய வருவோர் பிரா மற்றும் ஜட்டி ஆகியவற்றை மட்டுமே அணிந்திருக்க வேண்டும். வேறு ஆடைகளுடன் வரக்கூடாது. இந்த உடைகளுடன் வந்து ஷாப்பிங் செய்யலாம். அனைத்தும் இலவசம் என்று கூறியது அந்த அறிவிப்பு.
அவ்வளவுதான் நூற்றுக்கணக்கானோர் கடும்குளிரையும் பொருட்படுத்தாமல், ஜட்டி பிரா மட்டும் அணிந்தபடி கடைகள் முன்பு குழுமி விட்டனர்.
சொன்னபடி ஜட்டி, பிராவோடு வந்திருக்கிறார்களா என்பதைப் பார்த்து முதல் 100 பேரை மட்டும் கடைக்குள் அனுப்பினர் கடை ஊழியர்கள். அவர்களில் முக்கால்வாசிப் பேர் இளம் பெண்கள், இளைஞர்கள்தான்.
பிறகென்ன உள்ளே நுழைந்த அரைகுறை உடை அணிந்த ஸ்பெயின் இளைஞர்களும், யுவதிகளும் தங்களுக்குப் பிடித்த உடைகளை எடுத்து பையில் போட்டுக் கொண்டும், சிலர் அணிந்து கொண்டும் குஷியோடு வெளியேறினர்.
மாட்ரிட், பார்சிலோனா, சென் செபாஸ்டியன், மார்பெல்லா ஆகிய நகரங்களில் இந்த கவர்ச்சிகரமான களேபர விற்பனை நடந்தேறியது.
ஜட்டி மட்டும் அணிந்து வந்த ஆண்களுக்கு ஒரு டீசர்ட், ஜீன்ஸ் இலவசமாக அனுமதிக்கப்பட்டது. பிரா, பேன்டீஸுடன் வந்த பெண்களுக்கு பிளவுஸ் அல்லது டீசர்ட், அதேபோல கால்சட்டை அல்லது மினி ஸ்கர்ட் ஆகியவை இலவசமாக அளிக்கப்பட்டன.
ஸ்பெயின் நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் பெருகி வருகிறது. ஐரோப்பிய யூனியனிலேயே அதிக அளவில் வேலையில்லாத் திண்டாட்டம் இருப்பது இங்குதான் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications