ஜெர்மனியில் ஆசிட் ஏற்றிச் சென்ற கப்பல் கவிழ்ந்தது: 2 சிப்பந்திகள் காணவில்லை

Posted By:
Subscribe to Oneindia Tamil

பெர்லின்: 2 ஆயிரம் டன் சல்பியூரிக் அமிலம் ஏற்றிக் கொண்டு சென்ற கப்பல் ஒன்று இன்று ஜெர்மனியின் நீளமான நதியான ரைன் நதியில் கவிழ்நதது. அந்த கப்பலில் இருந்த 2 சிப்பந்திகளை காணவில்லை என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

இரண்டு சிப்பந்திகளை மீட்டுவிட்டோம். ஆனால் இன்னும் இருவரைக் காணவில்லை. அவர்கள் கதி என்ன என்று தெரியவில்லை என்று போலீஸ் செய்தி தொடர்பாள்ர பால் ஹெய்ன்ஸ் தெரிவித்தார்.

பனிக்கட்டிகள் உருகுவதாலும், மழையாலும் மேற்கு ஜெர்மனியில் உள்ள நதிகளில் தண்ணீர் அதிக அளவில் உள்ளது. இது தான் இந்த கப்பல் விபத்திற்கு காரணமா என்று தெரியவில்லை. இந்த விபத்து இன்று காலை 5 மணி அளவில் நடந்தது.

இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்த உடனே அதி நவீனக் கருவிகளுடன் கூடிய ஹெலிகாப்டர் ஒன்று மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
A ship carrying 2, 000 tonnes of sulphuric acid overturned today in Germany's longest river Rhine. Two crew members were resued and 2 others are missing, police officials said. A helicopter with infra red equipments was involved in rescue operation.
Please Wait while comments are loading...