சென்னை சங்கமம் நிகழ்ச்சியில் பட்டாசு விபத்தில் சிறுமி பலி-நிவாரணம் அளிக்க வைகோ கோரிக்கை
சென்னை: சென்னை சங்கமம் நிகழ்ச்சியின்போது பட்டாசு வெடித்ததில் சிறுமி உயிரிழந்தார். அவரது குடும்பத்திற்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கோரியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
சென்னை திருவொற்றியூர் அண்ணல் அம்பேத்கர் நகரைச் சேர்ந்த வெங்கடேசன்-கல்பனா தம்பதியரின் இரண்டரை வயது மகள் பாவனாஸ்ரீயுடன் திருவொற்றியூர் விம்கோ நகர் விளையாட்டு மைதானத்தில் 16.01.2011 அன்று நடந்த சென்னை சங்கமம் கலை நிகழ்ச்சியைப் பார்க்கச் சென்றிருந்தார்.
அந்த நிகழ்ச்சிக்கு கனிமொழி எம்பி வந்தபோது அவரை அமைச்சர் கே.பி.பி.சாமி அதிர்வேட்டுகள் முழங்க வரவேற்றார். அப்போது பட்டாசு வெடித்துச் சிதறி பார்வையாளர்கள் மீது தீப்பொறிகள் பட்டன.
இதில் இரண்டரை வயது பாவனாஸ்ரீ அதிர்வேட்டின் அதிர்ச்சியாலும் தீக்காயம் ஏற்பட்டதாலும் காதிலும், மூக்கிலும் ரத்தம் வடிய மயங்கி விழுந்தாள். உடனடியாக நுங்கம்பாக்கம் குழந்தைகள் நல மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பாவனாஸ்ரீ சிகிச்சை பலனின்றி இறந்து போனாள்.
சிலரை மகிழ்விப்பதற்காக செய்யப்பட்ட ஏற்பாட்டால் இதுபோன்ற துன்பம் ஏற்படுகிறது.
குழந்தையை இழந்து வாடும் குடும்பத்தார்க்கு உரிய நிவாரணமும், இழப்பீட்டுத் தொகையும் வழங்க வேண்டும். சம்பந்தப்பட்டவர்கள் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கோரியுள்ளார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications