டெல்லி: விளையாட்டுத் துறை அமைச்சராக இருந்த காலத்தை நான் சுத்தமாக மறந்து விட்டேன் என்று கடுப்புடன் கூறியுள்ளார் அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டு புள்ளியியல் துறை அமைச்சராக்கப்பட்டுள்ள எம்.எஸ்.கில்.
காமன்வெல்த் போட்டிக் குழப்பத்திற்கு கில்லே காரணம் என்பது பலரும் முன்வைத்த குற்றச்சாட்டு. திறமையான முறையில் அவர் செயல்படத் தவறியதால்தான், காமன்வெல்த் போட்டி தொடங்குவதிலேயே பெரும் சந்தேகம் எழக் காரணமாகி விட்டது என்று பலரும் குற்றம் சாட்டினர். பின்னர் காமன்வெல்த் போட்டி ஊழல்கள் வெளியாகி மத்திய அரசுக்குப் பெரும் சிக்கலை ஏற்படுத்தி விட்டது.
74 வயதான கில்லுக்குப் பதில் தற்போது 48 வயதான அஜய் மேக்கான் புதிய விளையாட்டுத்துறை அமைச்சராக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் தற்போது துறை மாற்றம் செய்யப்பட்டு புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத்துறைக்கு மாற்றப்பட்டுள்ளார் கில். இதனால் அவர் அதிருப்தியிலும் உள்ளார். நேற்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்திற்குக் கூட அவர் வரவில்லை.
இந்த நிலையில் துறை மாற்றம் குறித்து கில் கூறுகையில், என்ன நடந்தது, என்ன நடக்கிறது என்பதை அறிந்து கொள்வதிலோ அல்லது ஆராய்வதிலோ எனக்கு ஆர்வம் இல்லை. அதை நான் விரும்பவும் இல்லை. விளையாட்டுத்துறை அமைச்சராக நான் இருந்த காலத்தை மறந்து விட்டேன் என்றார் கில்.
A day after being shifted to another ministry in the cabinet reshuffle, M S Gill yesterday said he has forgotten his days spent in the Shastri Bhawan as the sports minister. Gill, who had come under attack over the mess in Commonwealth Games preparations, was shifted from Sports and Youth Affairs to Statistics and Programme Implementation in yesterday's reshuffling of portfolios by Prime Minister Manmohan Singh. Gill, 74, who was also blamed for the corruption-hit Games, was shunted to the low-profile ministry as the Prime Minister went for a younger 47-year-old Ajay Maken. "I don't look at any moves to study how and why or what has been done. I am not interested in all that" said Gill.
Notifications
Settings
Clear Notifications
No New Notifications
Notifications
Use the toggle to switch on notifications
Block for 8 hours
Block for 12 hours
Block for 24 hours
Don't block
To start receiving timely alerts, as shown below click on the Green “lock” icon next to the address bar
Click it and Unblock the Notifications
Close X
Close X
To Start receiving timely alerts please follow the below steps:
Click on the Menu icon of the browser, it opens up a list of options.
Click on the “Options ”, it opens up the settings page,
Here click on the “Privacy & Security” options listed on the left hand side of the page.
Scroll down the page to the “Permission” section .
Here click on the “Settings” tab of the Notification option.
A pop up will open with all listed sites, select the option “ALLOW“, for the respective site under the status head to allow the notification.
Once the changes is done, click on the “Save Changes” option to save the changes.