தீவிரவாதத்தின் மையப் புள்ளியே பாகிஸ்தான்தான்-எஸ்.எம்.கிருஷ்ணா
Subscribe to Oneindia Tamil

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார் எஸ்.எம்.கிருஷ்ணா. மெல்போர்ன் நகரில் இந்தியர்களை அவர் சந்தித்துப் பேசினார். அப்போது செய்தியாளர்களிடம் கிருஷ்ணா பேசுகையில், இந்தியாவின் பல்வேறு கவலைகள் குறித்து பாகிஸ்தான் அக்கறையே காட்டுவதில்லை. அந்தப் போக்கை அது மாற்றிக் கொள்ள முன்வர வேண்டும். நமது கவலைகளில் முக்கியமானது தீவிரவாதம். தீவிரவாதத்தையும், தீவிரவாதிகளையும் ஒடுக்கும் நடவடிக்கைகளில் பாகிஸ்தான் அக்கறை காட்ட வேண்டும்.
தீவிரவாதத்தின் மையப் புள்ளியாக பாகிஸ்தான் விளங்கி வருகிறது. மும்பைத் தாக்குதலில் ஈடுபட்ட குற்றவாளிகளை தண்டிப்பதிலோ, இந்தியாவிடம் ஒப்படைப்பதிலோ பாகிஸ்தான் அக்கறை காட்டாமல் இருப்பது கண்டித்தக்கத்கது.
மும்பைத் தாக்குதலில் ஈடுபட்ட ஒரு குற்றவாளியைக் கூட பாகிஸ்தான் பிடிக்க முடியாமல் காலம் தாழ்த்தி வருகிறது என்றார் கிருஷ்ணா.












Click it and Unblock the Notifications