டெல்லியில் பூண்டு விலை கிடுகிடு உயர்வு: கிலோ ரூ. 300
Subscribe to Oneindia Tamil

டெல்லியில் ஆரம்பத்தில் வெங்காயம், பின்னர் தக்காளி, அடுத்து வாழைப்பழ விலை கடுமையாக உயர்ந்தது. தற்போது பூண்டு விலையும் உயர்ந்துள்ளது.
இது குறித்து வியாபாரிகள் கூறியதாவது,
கடந்த் ஒன்றரை மாதங்களாக டெல்லியில் சில்லறை வியாபாரத்தில் பூண்டு கிலோ ரூ. 250 முதல் 300 வரை விற்கப்படுகிறது.
இன்னும் இரண்டு வாரத்தில் மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் மஹாராஸ்டிரா ஆகிய மாநிலங்களில் இருந்து பூண்டு வரத் துவங்கும். அதனால் மக்கள் பொறுத்திருக்க வேண்டியதைத் தவிர வேறு வழி இல்லை என்றனர்.
வரும் 15-ம் தேதிக்குப் பிறகு டெல்லி மார்க்கெட்டுக்கு புதிய பூண்டு வரத் துவங்கும் என்று ஆசாத்பூர் மார்க்கெட் பூண்டு வியாபாரிகள் சங்கத்தின் துணை தலைவர் ஜிதேந்திரா குராணா பிடிஐக்கு தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications