கோடியக்கரை கடலில் 3 மீனவர்கள் மாயம்: கவலையில் மீனவர்கள் குடும்பங்கள்
நாகை: கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்கள் 3 பேரைக் காணவில்லை. அவர்கள் கதி என்ன என்று தெரியாததால் அவர்கள் குடும்பத்தார் கவலை அடைந்துள்ளனர்.
வேதாரண்யத்தை அடுத்த ஆறுகாட்டுதுறை கிராமத்தைச் சேர்ந்தவர் ஜீவானந்தம் (36).மீனவர்.அவரது சொந்த படகில் அவரும், அதே பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் குமரவேல்(30), ஜெயராமன்(55) ஆகியோர் கடந்த 9-ம் தேதி கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.
அவர்கள் 3 பேரும் கோடியக்கரையில் இருந்து புறப்பட்டுள்ளனர். அவர்கள் நேற்று காலையில் கரை திரும்பியிருக்க வேண்டும். ஆனால் வரவில்லை. இதையடுத்து நேற்று மாலை 10 படகுகளில் 10-க்கும் மேற்பட்ட அப்பகுதி மீனவர்கள் காணாமல் போனவர்களைத் தேடச் சென்றனர். ஆனால் அவர்கள் கிடைக்கவில்லை.
இதனால் அக்கிராம மக்கள் கவலை அடைந்துள்ளனர். 3 மீனவர்கள் காணாமல் போயிருப்பதால் ஆறுகாட்டுதுறை மீனவர்கள் 1000 பேர் இன்று கடலுக்குச் செல்லவில்லை. இந்த சம்பவம் குறித்து மீன்துறை அதிகாரிகள் மற்றும் கடலோர காவல் படையிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications