For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அதிமுக-தேமுதிக கூட்டணி உடன்பாடு?: இறுதிக் கட்டத்தில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை?

By Chakra
Google Oneindia Tamil News

Vijayakanth and Jayalalitha
சென்னை: அதிமுக-தேமுதிக இடையிலான கூட்டணி, தொகுதிப் பங்கீடு குறித்த ரகசிய பேச்சுவார்த்தைகள் இறுதிக் கட்டத்தை எட்டிவிட்டதாகத் தெரிகிறது.

விரைவில் கூட்டணி குறித்து அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவும், தேமுதிக தலைவர் விஜய்காந்தும் அறிவிப்பு வெளியிடலாம் என்று கூறப்படுகிறது.

கடந்த பல மாதங்களாகவே இந்த இரு கட்சிகளுக்கும் இடையே ரகசியமாக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. தேமுதிக தரப்பில் 80 இடங்கள், ஆட்சியில் பங்கு, துணை முதல்வர் பதவி மற்றும் தேர்தலை சந்திக்க நிதியுதவி ஆகியவை கோரப்பட்டதாகக் கூறப்பட்டது.

ஆனால், 30 இடங்கள், ஆட்சியில் பங்கு இல்லை, துணை முதல்வர் பதவியும் இல்லை என்று அதிமுக தெரிவித்துவிட்டதால் பேச்சுவார்த்தைகளில் தொய்வு ஏற்பட்டது.

இந் நிலையில் தேமுதிகவுக்கு 40 முதல் 50 இடங்கள் வரை தர அதிமுக தயாராகிவிட்டதாகத் தெரிகிறது.

இதை தேமுதிக தரப்பும் ஏற்கத் தயாராகிவிட்டதால் விரைவில் கூட்டணி அறிவிப்பு வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.

இந்தப் பேச்சுவார்த்தைகளில் தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் மனைவி பிரேமலதா முக்கிய பங்கு வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Reports are there that secret talks between ADMK and DMDK has reached final stage. It is told that ADMK has agreed to give 40-50 states which is accepted by DMDK. Vijaykanth's wife Premalatha played a vital role in this discussion, reports told. It is expected that both the parties will announce about the alliance soon.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X