அதிமுக-தேமுதிக ஒருங்கிணைய வேண்டும்: பண்ருட்டி ராமச்சந்திரன் 'மறைமுக' கருத்து

திருப்பூரில் சாயப் பட்டறைகள் மூடப்பட்டதை எதிர்த்து நடந்த கண்டனப் பொதுக்கூட்டத்தில் அவர் பேசுகையில்,
நீதிமன்ற உத்தரவால் சாயப் பட்டறைகள் மூடப்பட்டதால் திருப்பூரில் 4.5 லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. இந்தப் பிரச்சனை ஏற்பட்டவுடன் உடனடி தீர்வு குறித்து திமுக அரசு யோசித்திருக்க வேண்டும். ஆனால், அவர்களுக்கு எந்த அக்கறையும் இல்லை.
அதேபோல மீனவர் பிரச்சனை, முல்லைப் பெரியாறு பிரச்சனை என தமிழகத்தின் எந்தப் பிரச்சனைக்கும் தீர்வு காணப்படவில்லை. தேர்ந்தெடுக்கக் கூடாதவர்களை நாட்டு மக்கள் தேர்வு செய்ததே இதற்குக் காரணம்.
காமராஜர், ராஜாஜி போன்ற தலைவர்கள் வாழ்ந்த நாட்டில் இன்று ஊழல் பெருகிவிட்டது. ஊழல்வாதிகளை மேலும் ஆட்சியில் அமர்த்துவது அடுத்த தலைமுறைக்கு நாம் செய்யும் துரோகம்.
எம்ஜிஆர் இருந்தவரை கருணாநிதியால் ஆட்சியில் அமர முடியவில்லை. அதேநிலை மீண்டும் ஏற்பட, எம்ஜிஆர் சக்திகள் ஒருங்கிணைய வேண்டும். அதற்கு, எம்ஜிஆர் உருவாக்கிய கட்சியும், எம்ஜிஆரின் உண்மை விசுவாசியின் (விஜயகாந்த்தை சொல்கிறார்) கட்சியும் ஒருங்கிணைய வேண்டும் என்றார்.
இதற்கிடையே தேமுதிகவுக்கு 41 தொகுதிகள், ஒரு ராஜ்யசபா தர அதிமுக ஒப்புக் கொண்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், இப்போது தேய்பிறை என்பதால் ஜோதிடத்தை நம்பும் ஜெயலலிதாவும் விஜய்காந்தும் கூட்டணி குறித்த அறிவிப்பை வெளியிட மாட்டார்கள் என்றும் மார்ச் மாதத்தில் தான் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications