நெல்லை அருகே பயங்கரம்-மாஜி எஸ்ஐ மகன் வெட்டிக்கொலை: ஒருவர் கைது
நெல்லை: பாளையங்கோட்டை அருகேயுள்ள திம்மராஜாபுரத்தில் வைக்கோல் படப்பு வைப்பது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் மாஜி எஸ்ஐ மகன் வெட்டி கொல்லப்பட்டார். இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார்.
பாளை அருகே உள்ள திம்மராஜாபுரம் ஆண்டாள் தெருவைச் சேர்ந்தவர் இசக்கி. ஓய்வு பெற்ற எஸ்ஐ. இவரது மகன்கள் லட்சுமண குமார், மகேஷ். அதே தெருவில் உள்ள புறம்போக்கு இடத்தில் வைக்கோல் படப்பு வைப்பது தொடர்பாக இசக்கிக்கும், அதே பகுதியைச் சேர்ந்த பழனி என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.
நேற்று மகேஷ் வைக்கோல் படப்புக்கு சென்று வி்ட்டு திரும்பியபோது பழனி அவரை வழிமறித்து தகராறு செய்தார். அவர்களுக்குள் வாக்குவாதம் முற்றவே பழனி அவரை சரமாரியாக வெட்டினார். இதை தடுக்க வந்த லட்சுமண குமாருக்கும் வெட்டு விழுந்தது. படுகாயமடைந்த இருவரும் நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
ஆனால் வழியிலேயே மகேஷ் இறந்தார். இது குறித்து பாளையங்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து பழனியை கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications