For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கூட்டணிக்கு கதாநாயகி வெற்றி தரும்: ஜி.கே.மணி

By Siva
Google Oneindia Tamil News

சென்னை: திமுக தேர்தல் அறிக்கை வெற்றித் திருமகளாய் அமைந்துள்ளது என்று பாமக தலைவர் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது,

கடந்த 2006-ம் ஆண்டு தேர்தலின்போது வெளியிடப்பட்ட திமுக தேர்தல் அறிக்கையை கதாநாயகன் என்று அனைவரும் போற்றினர். கடந்த தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைக்க முக்கிய காரணமாக இருந்தது. அதில் ஒரு கிலோ அரிசி ரூ. 2க்கு வழங்கப்படும், இலவச கலர் டிவி, விவசாய கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல வாக்குறுதிகள் இடம்பெற்றிருந்தன. தேர்தல் நேரத்தில் தான் கொடுத்த வாக்குறுதிகளை எல்லாம் கருணாநிதி நிறைவேற்றிவி்ட்டார்.

இவ்வாறு சொன்னதை சொன்னபடி செய்ததோடு மட்டுமில்லாமல், கலைஞர் மருத்துவ காப்பீட்டுத் திட்டம், இலவச வீடு வழங்கும் திட்டம், 108 ஆம்புலன்ஸ் என்று சொல்லாதவற்றையும் மக்களின் நலன் கருதி செய்துள்ளது திமுக அரசு.

முதல்வர் கருணாநிதி கதாநாயகி என்று வர்ணித்துள்ள இந்த தேர்தல் அறிக்கையில் இலவச கிரைண்டர் அல்லது மிக்சி, மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 2 லட்சம் மானியத்துடன் ரூ. 4 லட்சம் கடன், கல்விக் கடனுக்கான வட்டியை அரசே ஏற்பது, கல்லூரி மாணவர்களுக்கு இலவச லேப்-டாப் என்று பல்வேறு வாக்குறுதிகள் இடம் பெற்றுள்ளன.

கடந்த 2006-ம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருந்த அனைத்தும் நிறைவேற்றப்பட்டுள்ளதால் இந்த முறையும் அவ்வாறே நடக்கும் என்று மக்கள் இடையே எதிர்பார்ப்பும், நம்பிக்கையும் ஏற்பட்டுள்ளது. இந்த தேர்தல் அறிக்கை திமுக கூட்டணிக்கு வெற்றியைத் தரும் வெற்றித் திருமகள் என்றார்.

English summary
PMK chief G.K.Mani hails DMK's election manifesto. He says that, election manifesto described as heroine by the CM Karunanidhi will get us victory in the assembly election.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X