திருப்பூர் வடக்கு தொகுதியில் திமுக வேட்பாளர் கோவிந்தசாமி மனு தாக்கல்
Subscribe to Oneindia Tamil
சென்னை: திருப்பூர் வடக்கு தொகுதியில் போட்டியிட திமுக வேட்பாளர் கோவிந்தசாமி இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 13-ம் தேதி நடக்கிறது. அதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 19-ம் தேதி துவங்கியது. இந்நிலையில் திரூப்பூர் வடக்கு தொகுதியில் போட்டியிட திமுக வேட்பாளர் கோவிந்தசாமி இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
தற்போது திமுக சார்பில் போட்டியிடும் இவர் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ.வாக இருந்தார்.
திருப்பூர் வடக்கு தொகுதியில் கடந்த 3 நாட்களில் மட்டும் 52 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications