For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மதிமுகவை வெளியேற்றியதால் அதிமுகவினர் வேதனையில் உள்ளனர்-வைகோ

Google Oneindia Tamil News

Vaiko
ஈரோடு: நம் பிடரியை பிடித்து தள்ளுவது போல தள்ளி விட்டார்கள். அ.தி. மு.க. தலைமையின் நடவடிக்கை அ.தி.மு.க. தொண்டர்களையே வேதனைபட செய்திருக்கிறது என்று கூறியுள்ளார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ.

ஈரோட்டில் மதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அதில் வைகோ கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் பேசுகையில்,

நாமாக வெளியேறவில்லை

அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து நாமாக வெளியேறவில்லை. நாம் கேட்ட தொகுதிகள் கொடுக்காமல் 6 தொகுதிகள், 7 தொகுதிகள், 8 தொகுதிகள், மீண்டும் 7 தொகுதிகள் என்று நம்மை கூட்டணியை விட்டு வெளியேற்ற செய்ய அவர்கள் திட்டமிட்டார்கள்.

நம் பிடரியை பிடித்து தள்ளுவது போல தள்ளி விட்டார்கள். அ.தி. மு.க. தலைமையின் நடவடிக்கை அ.தி.மு.க. தொண்டர்களையே வேதனைபட செய்திருக்கிறது.

கடந்த 5 ஆண்டுகளாக அ.தி.மு.க. பெரும்பான்மை இடத்தை பிடித்து ஆட்சியை பிடிக்கும் என்று கூறி வந்தேன். ஆனால் எந்த இடத்திலும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா முதலமைச்சர் ஆவார் என்று கூறவில்லை.

மலையில் இருந்து தூக்கி வீசிய கருணாநிதி

ம.தி.மு.க. உண்மையான ஜனநாயக கட்சி. இதன் நடவடிக்கைள் திறந்த புத்தகம். கலைஞர் என்னை மலை உச்சியில் இருந்து தூக்கி வீசியபோது என்னை மடிகளில் தாங்கி வைத்து பொதுச்செயலாளர் என்ற பதவியை கொடுத்தவர்கள் நீங்கள்.

உங்கள் உணர்வுகளுக்கு எப்போதும் மதிப்பளிப்பேன். இந்த முடிவின் மூலம் கட்சியின் உணர்வு மட்டுமின்றி மக்களின் நல்லெண்ணத்தையும் பெற்று இருக்கிறோம்.

மக்களுக்கு நல்ல வாய்ப்பு

அ.தி.மு.க. கூட்டணியை விட்டு வெளியேற்றியது தமிழக மக்கள் நம்மைபற்றி அலசிபார்க்க, ஆராய்ந்து பார்க்க ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்துள்ளது.

இந்த காலகட்டத்தில் படித்தவர்களையும், நம் மீது நல்லெண்ணம் கொண்டவர்களையும் கட்சியில் இணைப்போம். அண்ணா கண்ட கனவை நிறைவேற்ற, தமிழர்களின் உரிமையை காக்க, தமிழ் ஈழ மக்களின் உரிமையை மீட்க தொடர்ந்து பாடுபடுவோம்.

2012 மாற்றத்திற்கான வியூகங்களை வகுத்து இருக்கிறேன். வியூகங்களை வெளியில் கூறாமல் விவேகமாக நடந்து வெற்றி பெறுவோம். இந்த தேர்தலை பொறுத்தவரை நாம் தேர்தலை புறக்கணிக்கவில்லை. இந்த தேர்தலில் நாம் போட்டியிடவில்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

தி.மு.க. தலைமையையோ, அ.தி.மு.க. தலைமையையோ விமர்ச்சிப்பது நமது நோக்கம் அல்ல. உங்களுக்கு தெரியும். நாம் என்ன செய்ய வேண்டும் என்பது. அதன்படி ஜனநாயக கடமையாற்றுவோம் என்றார் வைகோ.

English summary
MDMK general secretary Vaiko has said that, even ADMK cadres are not happy with the ouster of MDMK. He further told that, Our intention is not criticising DMK or ADMK. We will continue our democratic duty, he added.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X