Heavy Rain: நைட்டு ஃபுல்லா வச்சு செய்யப் போகும் மழை.. கோவை, திருச்சி உள்பட 8 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!
சென்னை: தமிழகத்தில் இன்று மாலை பல்வேறு இடங்களில் பலத்த காற்று மற்றும் இடி, மின்னலுடன் மழை வெளுத்து வாங்கிய நிலையில் இரவிலும் மழை வெளுத்து வாங்கும் என்று வானிலை மையம் கூறியுள்ளது. கோவை, சேலம், நீலகிரி, திருச்சி உள்பட 8 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை வெளுத்து வாங்கும் என வானிலை மையம் கூறியுள்ளது.
தமிழகத்தில் இன்று வெயில் ஒருபுறம் வெளுத்து வாங்கிய நிலையில் மழையும் ஒருபுறம் பிச்சு உதறியுள்ளது. வெயில் இதுவரை இல்லாத அளவாக இன்று 17 இடங்களில் சதம் அடித்துள்ளது. நாளுக்கு நாள் அதிகரிக்கும் வெப்பத்தால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

வெளுத்து வாங்கிய கனமழை
எனினும் நேற்று முதல் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழையும் பெய்யத் தொடங்கியுள்ளது. நேற்று நெல்லையில் ஒரே நாளில் 7 செமீ அளவு நாலுமுக்கு பகுதியில் மழை பெய்தது. இன்றும் கோவை முதல் குமரி வரை பரவலாக பல்வேறு இடங்களில் மழை பெய்துள்ளது. நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சியில் ஆலங்கட்டி மழையும் கொட்டியது. பழனியிலும் மழை வெளுத்து வாங்கியது.
இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. சாலைகளிலும் தண்ணீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடின. இந்த நிலையில் இரவு முழுக்க மழை பெய்ய வாய்பு உள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது. இது தொடர்பாக வானிலை மையம் கூறியிருப்பதாவது:-
8 மாவட்டங்களுக்கு அலர்ட்
"தமிழகத்தில் நள்ளிரவு 1 மணி வரை, கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கரூர், சேலம், திருச்சி ஆகிய 8 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இதனால் சில இடங்களில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்க வாய்ப்பு உள்ளது" என்று கூறியுள்ளது. முன்னதாக வானிலை மையம் கூறியிருப்பதாவது:-
அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:
இன்று முதல் 4 ஆம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு, எனினும் சற்று உயரக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில், கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் அசௌகரியம் ஏற்படலாம்.
மழை அளவு (சென்டிமீட்டரில்):
ஊத்து (திருநெல்வேலி) 7,
நாலுமுக்கு (திருநெல்வேலி) 6,
சின்னக்கல்லார் (கோயம்புத்தூர்) 5,
காக்காச்சி (திருநெல்வேலி), பாலமோர் (கன்னியாகுமரி), அடையாமடை (கன்னியாகுமரி), சிற்றாறு-1 (கன்னியாகுமரி), சிவலோகம்(சிற்றாறு-II) (கன்னியாகுமரி) தலா 4,
பழைய தாலுகா அலுவலகம் ஸ்ரீவைகுண்டம் (தூத்துக்குடி), பெரியாறு (தேனி), களக்காடு (திருநெல்வேலி), மாஞ்சோலை (திருநெல்வேலி), உபாசி TRF AWS (கோயம்புத்தூர்), வால்பாறை PTO (கோயம்புத்தூர்) தலா 3,
சின்கோனா (கோயம்புத்தூர்), கருப்பாநதி அணை (தென்காசி) தலா 2,
சுருளக்கோடு (கன்னியாகுமரி), களியல் (கன்னியாகுமரி), பேச்சிப்பாறை (கன்னியாகுமரி), பாப்பிரெட்டிப்பட்டி (தர்மபுரி) தலா 1 செமீ மழை பெய்துள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.
-
கத்திரி வெயில் முடிஞ்சுபோச்சு.. சென்னை உட்பட 5 மாவட்டங்களில் இன்று காலையிலேயே மழைக்கு வாய்ப்பு! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம்












Click it and Unblock the Notifications