IT jobs: டிசிஎஸ்-ல் சூப்பரான வேலைவாய்ப்பு.. மே 9 ம் தேதி சென்னையில் இண்டர்வியூ
சென்னை: சென்னையில் உள்ள டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் மே 9 ம் தேதி காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பம் செய்யலாம்.
நம் நாட்டின் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றாக டிசிஎஸ் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் இருந்து பல்வேறு புதிய வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன.

இந்நிலையில் தான் மே 9 ம் தேதி டிசிஎஸ் நிறுவனத்தில் ஏராளமான பணிகளை நிரப்பும் வகையில் Walk In Drive நடத்தப்பட உள்ளது. அதில்
அசூர் டேட்டா இன்ஜினியர் (Azure Data Engineer) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
என்னென்ன தகுதிகள் வேண்டும்?
இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோருக்கு சில முக்கிய தகுதிகள் வேண்டும். அதன்படி Azure Databricks-யில் நிபுணத்துவம் பெற்றிருக்க வேண்டும். அதேபோல் அசூர் டேட்டா பேக்டரி (Azure Data Factory)-யில் அனுபவம் கொண்டிருக்க வேண்டும். மேலும் பைத்தான், PySpark, SQL உள்ளிட்டவற்றில் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
பணி அனுபவம் என்ன?
ETL Process, CI/CD Pipelines, Azure SQL Database, Azure SQL Warhouse, Azure Synapse Analytics, Data Ingestion, Curation, Tranformation Using Spark உள்ளிட்டவை தெரிந்திருக்க வேண்டும். இவை எல்லாவற்றுக்கும் மேலாக சம்பந்தப்பட்ட பிரிவில் 5 ஆண்டு முதல் 10 ஆண்டு வரை அனுபவம் கொண்டிருக்க வேண்டும். அதோடு 6+ ஆண்டுகள் வரை Azure Stacks-யில் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
மே 9 ம் தேதி இண்டர்வியூ
தற்போதைய அறிவிப்பில் பணிக்கான சம்பளம் குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. பணி அனுபவம் மற்றும் திறமையை பொறுத்து சம்பளம் நிர்ணயம் செய்யப்படும். இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும். இண்டர்வியூ என்பது மே 9 ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது.
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வழியாக விண்ணப்பம் செய்ய வேண்டும். இப்படி விண்ணப்பம் செய்வோருக்கு இண்டர்வியூவுக்கான நேரம், இடம் குறித்த விவரங்கள் அனுப்பி வைக்கப்படும். அதன்பிறகு மே 9 ம் தேதி இண்டர்வியூவில் பங்கேற்கலாம்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
பெங்களூருக்கு வேட்டு! இந்தியாவிலேயே அதிக சம்பள உயர்வு கிடைக்கும் நகரம் எது தெரியுமா? -
தூத்துக்குடியில் வேலை.. சுகாதார ஆய்வாளர், செவிலியர் என 44 பணியிடங்கள்.. விண்ணப்பிப்பது எப்படி? -
IT Jobs: நாளை காலை 11 மணிக்கு சென்னையில் இண்டர்வியூ.. அனுபவம் வேண்டாம்.. அழைக்கும் HCL -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா!












Click it and Unblock the Notifications