For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மியான்மர் பூகம்பத்தில் 75 பேர் பலி, 110 பேர் படுகாயம்

By Siva
Google Oneindia Tamil News

யங்கூனே: நேற்று மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இதுவரை குறைந்தது 75 பேர் பலியாகியுள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாக அஞ்சப்படுகிறது.

நேற்று மியான்மரில் சக்திவாயந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவானது. இந்த பூகம்பத்தால் பாங்காக்கில் அதிர்வுகள் உணரப்பட்டன.

இது குறி்த்து மியான்மர் அதிகாரி ஒருவர் கூறியதாவது,

இந்த பூகம்பத்திற்கு 74 பேர் பலியாகினர். மேலும், 110 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இவர்கள் அனைவரும் பூகம்பத்தின் மையபகுதிக்கு அருகில் உள்ள 5 பகுதிகளைச் சேர்ந்தவர்கள். இந்த பகுதிகளில் 240-க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன. தூரத்தில் இருக்கும் பகுதிக்குச் சென்று மீட்புப் பணி மேற்கொள்ள முயற்சித்து வருகிறோம்.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் காயமடைந்தவர்களை கண்டுபிடிக்க இராணுவம், போலீஸ் மற்றும் உள்ளூர் அதிகாரிகள் முயற்சி மேற்கொண்டுள்ளனர். ஆனால் அனைத்து சாலைகளும் சேதமடைந்துள்ளன என்றார்.

English summary
A powerful earthquake measuring 6.8 hit Myanmar yesterday killing at least 75 and injuring 110.Officials fear that the death toll may increase. More than 240 buildings collapsed.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X