For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

விஜயகாந்திற்கு ரூ. 2.5 கோடி கடன்-சொத்து மதிப்பு ரூ. 19. 88 கோடி

By Siva
Google Oneindia Tamil News

Vijayakanth
சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் ரிஷிவந்தியம் தொகுதிக்கான வேட்பு மனுவை நேற்று தாக்கல் செய்தார். அப்போது அவர் சமர்பித்த சொத்துக் கணக்கின்படி அவரிடம் ரூ. 19. 88 கோடி மதிப்பிலான அசையும், அசையா சொத்துகள் உள்ளன.

வரும் சட்டசபை தேர்தலில் தேமுதிக அதிமுகவுடன் கூட்டணி வைத்து போட்டியிடுகிறது. தேமுதிக மொத்தம் 41 தொகுதிகளில் போட்டியிடுகிறது. கடந்த 2006-ம் ஆண்டு தேர்தலில் விஜயகாந்த் சென்னையில் இருந்து 200 கிமீ தூரத்தில் உள்ள விருத்தாச்சலத்தில் போட்டியிட்டு வெற்றி வெற்றார்.

இந்த தடவை சென்னையில் இருந்து 190 கிமீ தூரத்தில் இருக்கும் ரிஷிவந்தியத்தில் போட்டியிடுவது தனக்கு பாத்துகாப்பானது என்று நினைத்து களம் இறங்குகிறார்.

நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தபோது அவர் தனது சொத்துக் கணக்கை சமர்பித்தார். அதன்படி அவரிடம் ரூ. 19. 88 கோடி மதிப்பிலான அசையும், அசையா சொத்துகளும், அவரது மனைவி பிரேமலதாவிடம் ரூ. 6.57 கோடி மதிப்பிலான சொத்துகளும் உள்ளன.

அவர் கையிருப்பும், வங்கியிலும் மொத்தம் ரூ. 7 லட்சத்து 56 ஆயிரத்து 90-ம், பிரேமலதாவிடம் ரூ. 6 லட்சமும் உள்ளது.

2009-10-ம் ஆண்டில் விஜயகாந்த் ரூ. 53. 77 லட்சத்திற்கும், அவரது மனைவி ரூ. 12.82 லட்சத்திற்கும் வருமான வரி செலுத்தியுள்ளனர்.

விஜயகாந்த் ரூ. 7.5 கோடியும், பிரேமலதா ரூ. 1.72 கோடியும் அரசுக்கு வருமான வரி மற்றும் சொத்து வரியில் பாக்கிவைத்துள்ளனர். இது தொடர்பான அவர்கள் மேல்முறையீடும் நிலுவையில் உள்ளது.

விஜயகாந்திற்கு ரூ. 2.5 கோடி கடன் உள்ளது.

English summary
DMDK founder leader Vijayakanth has asset worth Rs. 19.88 crore. He filed the nomination yesterday and according to the affidavit he has Rs. 19.88 crore worth moveable and immoveable asset. His wife Premalatha has asset worth Rs. 6.57 crore. The actor turned politician has a debt of Rs. 2.5 crore.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X