For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விரைவில் புதிய 10 ரூபாய் நாணயம்-வெளியிடுகிறது ரிசர்வ் வங்கி

Google Oneindia Tamil News

சென்னை: விரைவில் புதிய பத்து ரூபாய் நாணயத்தை ரிசர்வ் வங்கி வெளியிடவுள்ளது. ரிசர்வ் வங்கியின் 75வது ஆண்டையொட்டி இந்த புதிய நாணயம் வெளியிடப்படுகிறது.

அசோகசக்கரத்தில் உள்ள சிங்க முகம் நாணயத்தின் மையத்தில் இடம் பெற்றிருக்கும். மேலும் அதற்குக் கீழ் சத்யமேவ ஜெயதே (வாய்மையே வெல்லும்) என்ற வாசகம் இடம் பெற்றிருக்கும்.

மேலும், நாணயத்தின் மேலும் கீழும், பாரத் என்று இந்தியிலும், இந்தியா என்று ஆங்கிலத்திலும் வாசகம் இடம் பெற்றிருக்கும்.

நாணயத்தின்மறுபக்கத்தில் பனை மரமும், அதன் கீழ் புலிச் சின்னமும் பொறிக்கப்பட்டிருக்கும். இது ரிசர்வ் வங்கியின் சின்னமாகும். அதில் ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா என்ற வார்த்தை ஆங்கிலம் மற்றும் இந்தியில் பொறிக்கப்பட்டிருக்கும். அதேபோல பிளாட்டினம் ஜூபிளி என்ற வார்த்தை ஆங்கிலம் மற்றும் இந்தியில் இடம் பெற்றிருக்கும். அதனுடன் 1935-2010 என்ற வருடமும் இடம்பெற்றிருக்கும்.

English summary
The Reserve Bank of India would soon put into circulation new ten rupee coins with the theme "Platinum Jubilee of the RBI". An official release today said on the obverse, the face of the coin would bear the Lion Capitol of Ashok Pillar in the Center with the legend "Satyameva Jayate" inscribed below. It would be flanked by words "Bharath" in Hindi in the left upper periphery and "India" in English in the right upper periphery. It would also bear the denominational value ten in international numerals below the Lion capitol, flanked by words "Rupee" in Hindi and "Rupees" in English in the left and right lower periphery. The reverse of the coin would bear Palm Tree and Tiger -- the emblem of the RBI -- with inscription of the word Reserve Bank of India in Hindi and English on the left and right periphery respectively. The word 'Platinum Jubilee' in Hindi and English along with year 1935-2010 would also be inscribed below the emblem.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X