For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மொஹாலி மைதானத்தில் இந்தியா, பாக். மோதலைப் பார்த்தார் கிலானி

Google Oneindia Tamil News

Manmohan Singh and Gilani
சண்டிகர்: இந்தியா, பாகிஸ்தான் இடையிலான உலகக் கோப்பைக் கிரிக்கெட் அரை இறுதிப் போட்டியை மொஹாலி மைதானத்தில் நேரில் கண்டு களித்தார் பாகிஸ்தான் பிரதமர் கிலானி. அவருடன் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கும் போட்டியைப் பார்த்தார்.

போட்டியைக் காண்பதற்காக சண்டிகர் வந்த கிலானிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. வரவேற்புக்குப் பின்னர் தாஜ் ஹோட்டலுக்குச் சென்றார் கிலானி. பின்னர் அங்கிருந்து மொஹாலி மைதானம் வந்தடைந்தார். அங்கு அவரை பிரதமர் மன்மோகன் சிங் வரவேற்றார்.

முன்னதாக சண்டிகர் கிளம்பும் முன்பு இஸ்லாமாபாத் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கிலானி பேசுகையில், அரை இறுதிப் போட்டியைப் பார்க்க என்னை அழைத்தமைக்காக பிரதமர் மன்மோகன் சிங்குக்கு நான் நன்றி கூறிக் கொள்கிறேன். இந்த மாபெரும் போட்டியைக் காண ஆவலாக உள்ளேன். இந்தப் போட்டி இரு நாடுகளுக்கும் இடையிலான இடைவெளியை நிரப்பும் என்று எதிர்பார்க்கிறேன் என்றார்.

இன்று இரவு மொஹாலி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் கிலானி மற்றும் பாகிஸ்தான் குழுவினருக்கு இரவு விருந்து அளித்துக் கெளரவிக்கிறார் பிரதமர் மன்மோகன் சிங்.

English summary
Pakistani Prime Minister Yousuf Raza Gilani has landed in Chandigarh and will be welcomed by Dr Manmohan Singh in a short while from now at the Mohali stadium, where India will take on Pakistan in the World Cup semi-finals. Before leaving Islamabad for India, Mr Gilani thanked Dr Singh for inviting him to the match, and said that he's "looking forward to a great game." He also said he believes "this match will bridge the gap" between India and Pakistan. Dr Singh is hosting tonight for the Pakistani delegation at the stadium.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X