வெயிலால் வந்த கிராக்கி-இளநீர், பதனீருக்கு கடும் தட்டுப்பாடு

நெல்லை மாவட்டத்தில் கோடை தொடங்கியதிலிருந்தே வெயில் வருத்தெடுக்கிறது. சில பகுதிகளில் மழை எட்டி பார்த்தாலும் மாநகரை ஒட்டிய பகுதிகளை ஒட்டு மொத்தமாக புறக்கணிக்கிறது.
இதனால் வெயிலின் உக்கிரம் தாக்காமல் வெளியில் நடமாடவே மக்கள் அஞ்சும் நிலை உள்ளது. உடல் சூட்டை தணித்து கொள்ள பழங்களையும், குளிர்பானங்களையும் விரும்பி வாங்கி உள்கொள்கின்றனர்.
கடந்த ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பழங்களின் விலை தறுமாறாக உயர்ந்துள்ளது. எந்த சீசனிலும் குறைந்தவிலைக்கு கிடைக்கும் வாழை பழங்கள் கூட தற்போது அதிக விலைக்கு விற்கப்படுகிறது. வயல் வாழைப்பழம் ஒன்று ரூ.4 வரை விற்கிறது. ரூ.5க்கு கிடைத்த செவ்வாழையின் விலை இரட்டிடப்பாகிவிட்டது. பச்சை பழம் கிலோ ரூ.25 வரை விற்கப்படுகிறது. கற்பூரவள்ளி, நேத்திரம் உள்ளிட்ட சில ரகங்களுக்கு தட்டுபாடு ஏற்பட்டுள்ளது.
இதனால் உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கும் மருத்துவ குணங்கள் கொண்ட இயற்கை பானங்களான இளநீர், பதனீரை மக்கள் நாடி செல்கின்றனர். தற்போது அவற்றுக்கும் கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது.
இளநீர் உற்பத்தி குறைந்ததால் வெளிமாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து வியாபாரிகள் மொத்தமாக கொள்முதல் செய்து வருகின்றனர். கடந்த இரு மாதங்களுக்கு முன்பு ரூ.10க்கு கிடைத்த இளநீர் ரூ.15க்கும், ரூ.20க்கும் விற்கப்படுகிறது.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங்












Click it and Unblock the Notifications