காங்கேயத்தில் லட்சக்கணக்கில் பணம் வைத்து சூதாட்டம்-தொழிலதிபர்கன் கைது
காங்கேயம்: காங்கேயத்தில் ரகசியமாக செயல்பட்டு வந்த சூதாட்ட கிளப்பை போலீசார் சுற்றி வளைத்தனர்.
சூதாட்ட கிளப்
காங்கேயத்திற்கு அருகே உள்ளது வெள்ளரப்பாறை கிராமம். இக்கிராமத்தில் உள்ள ஒரு தோட்டத்தில் குடில் அமைக்கப்பட்டு நாள்தோறும் சூதாட்டம் நடப்பதாக மாவட்ட காவல்துறைக்கு ரகசிய தகவல் வந்தது.
அதனடிப்படையில், மாவட்ட எஸ்.பி ஏ. அருண் உத்தரவின் பேரில், மாவட்ட குற்றப்பிரிவு ஆய்வாளர் செந்தில் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
சுற்றிவளைப்பு
காங்கேயம் விரைந்த தனிப்படை சம்பந்தப்பட்ட சூதாட்ட கிளப்பை சுற்றி வளைத்தது. அங்கு சீட்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த 54 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களுள் பெரும்பாலானோர் காங்கேயம், வெள்ளக்கோவில், முத்தூர், நாமக்கல் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த தொழிலதிபர்கள் என்பது விசாரணையில் தெரியவந்தது.
லட்சக்கணக்கில் பணம்
தொழிலதிபர்கள் சூதாட்டத்தில் லட்சக்கணக்கில் பணம் கட்டி விளையாடுவதும் தெரியவந்தது. சூதாட்ட கிளப்பில் இருந்து ரூ.15.67 லட்சம் பணம், 15 கார்கள் மற்றும் 5 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
காங்கேயம் போலீஸ் மீது நடவடிக்கை
மேற்படி சீட்டாட்ட கிளப் காங்கேயம் பகுதியில் நீண்டகாலமாக செயல்பட்டு வந்துள்ளது. ஆனாலும், இதை கண்டு கொள்ளாத உள்ளூர் போலீசார் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்.பி அருண் தெரிவித்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications