வரலாறு காணாத வெயில்-நடமாட முடியாமல் மக்கள் ஸ்தம்பிப்பு

தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் கோடை வெயில் கொடி கட்டிப் பறக்கிறது. இப்படி ஒரு வெயிலை சமீப ஆண்டுகளில் பார்க்கவில்லை என்று கூறும் அளவுக்கு வெயில் மிகக் கடுமையாக உள்ளது. இப்போதே 108 டிகிரி என்ற அளவுக்கு சராசரியாக வெயில் வெளுத்துக் கட்டுகிறது.
மேலும் மாநிலத்தின் பல பகுதிகளிலும் சராசரியாக 100 டிகிரியைத் தாண்டி விட்டது வெயில். சென்னையில்தான் கடுமையாக உள்ளது வெயில்.
வெளியில் போகவே முடியவில்லை. அனல் காற்றாக வீசுகிறது. வாகனங்களை நிறுத்தி விட்டு போய் எடுத்தால் சுட்டுப் பொசுக்குகிறது. வீட்டிலோ நிலைமை இன்னும் மோசம். பேன் போட்டால் வெப்பக் காற்றுதான் வருகிறது. அதற்கு பேசாமல் சும்மா இருக்கலாம் என்று நினைக்கும் அளவுக்கு வெயில் மகா கொடுமையாக உள்ளது.
நள்ளிரவைத் தாண்டியும் கூட வெப்பமாக இருப்பதால் தூங்க முடியாமல் மக்கள் கடும் சிரமத்துக்குள்ளாக நேரிடுகிறது. இது போதாதென்று அவ்வப்போது மின்வெட்டும் பட்டையைக் கிளப்புவதால் மக்கள் நிலை மகா கொடுமையாக உள்ளது.
ஏசி வைத்திருப்பவர்கள் சற்று நிம்மதி பெறுகிறார்கள். ஆனால் அந்த வசதி இல்லாதவர்கள் பாடுதான் பெரும் கொடுமையாக உள்ளது.
குளிர்பானங்கள், சர்பத், கரும்புச் சாறு, தர்பூஸ் என தாகம் தணிக்கவும், குளுமை பெறவும் மக்கள் ஓடுவதை அதிகம் காண முடிகிறது.
ஏதாவது கோடை மழை வந்தால்தான் மக்கள் சற்று நிம்மதிப் பெருமூச்சு விட முடியும் என்ற நிலையில் தமிழகம் தத்தளித்துக் கொண்டிருக்கிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications