பாலியல் தொல்லை-தற்கொலைக்கு முயன்ற ரேஷன் ஊழியை
உடுமலைப்பேட்டை: மேலதிகாரியின் பாலியல் தொல்லை பொறுக்க முடியாத ரேஷன் கடை ஊழியை லதா என்பவர் தற்கொலைக்கு முயன்றார்.
ரேஷன் கடை ஊழியை:
உடுமலைப்பேட்டை சீனிவாச வீதியில் கூட்டுறவு பண்டகத்தின் கட்டுப்பாட்டில் மினி மார்க்கட் ரேஷன் கடை இயங்கி வருகிறது. இக்கடையில் பில் கிளார்க்காக லதா என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று தனியாக வாழ்ந்து வருபவர்.
தற்கொலை முயற்சி:
நேற்று முன்தினம் காலை ரேஷன் கடைக்குள் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார் லதா. கடைக்கு வந்த வாடிக்கையாளர்கள் லதாவை உடுமலை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். சிகிச்சை அளிக்கையில் அவர் சாணிப்பவுடரை கரைத்து குடித்துள்ளார் என்பது தெரியவந்தது.
செக்ஸ் டார்ச்சர்:
கூட்டுறவுத்துறை உயரதிகாரியான காளியப்பன் கடந்த 6 மாதங்களாக பல்வேறு பாலியல் தொந்தரவுகளை கொடுத்து வருகிறார். அதனால் விரக்தி அடைந்து சாணிப்பவுடரை தண்ணீரில் கலக்கி குடித்து தற்கொலை செய்துகொள்ள முயன்றேன் என அவர் காவல்துறைக்கு வாக்குமூலம் அளித்துள்ளார்.
வழக்கு பதிவு:
இதனையடுத்து காளியப்பன் மீது பெண்களுக்கு எதிரான வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு அவரைத் தேடும் படலம் முடுக்கி விடப்பட்டுள்ளது. லதா மீதும் தற்கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications