சிகரெட் லைட்டரைப் பற்ற வைத்தபோது வெடித்து வாலிபர் காயம்
திருவனந்தபுரம்: கேரளாவில் சிகரெட் லைட்டர் வெடித்து சிதறியதில் வாலிபர் வாலிபரின் கை விரல்கள் துண்டானது.
கேரளாவில் இடுக்கி அருகே உள்ள பழயரிக்கண்டம் பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ். இவர் நேற்று முன்தினம் மாலை அங்குள்ள கஞ்சிக்குழி பகுதியில் நண்பர்களுடன் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது ரோட்டில் ஒரு சிகரெட் பாக்கெட்டும், சிகரெட் லைட்டரும் கிடந்தன. அதை எடுத்து ஆளுக்கு ஒரு சிகரெட்டை பற்ற வைக்க முயன்றனர்.
சிகரெட் லைட்டரை சந்தோஷ் எடுத்து அழுத்தியதும் திடீரென பயங்கர சத்ததுடன் வெடித்தது. இதில் சந்தோஷின் வலது கை, மற்றும் முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. கையில் இரண்டு விரல்கள் துண்டாகின.
இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. சந்தோஷ் உடனடியாக எர்ணாகுளத்தில் உள்ள தனியார் மருத்துவமனையி்ல் சேர்க்கப்பட்டார்.
சம்பவம் குறித்து இடுக்கி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிகரெட் லைட்டர் வெடிகுண்டு போல் வெடித்த சம்பவம் கேரள போலீசுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications