விவசாயிகளுடன் சேர்நது மறியல் செய்த ராகுல் காந்தி கைதாகி விடுதலை

உ.பி. மாநிலம் நொய்டாவில் விவசாய நிலங்களை எடுத்துக் கொண்டதற்கு போதிய இழப்பீடு தராததைக் கண்டித்து விவசாயிகள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நேற்று இந்தப் போராட்டத்தில் திடீரென ராகுல் காந்தி கலந்து கொண்டார். நேற்று இரவு பலத்த போலீஸ் கண்காணிப்பையும் மீறி ராகுல் காந்தி, பட்டா பரசுல் என்ற இடத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுடன் இணைந்து கொண்டார் ராகுல். அவர்களுடன் கிட்டத்தட்ட 19 மணி நேரம் அவர் போராட்டத்தில் பங்கு பெற்றார்.
இதையடுத்து அவரை போலீஸார் திடீரென கைது செய்தனர். அவரை இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தவுள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. ஆனால் நள்ளிரவு வாக்கில் அவரை திடீரென போலீஸார் சொந்த ஜாமீனில் விடுவித்து விட்டனர்.
அதன் பின்னர் ராகுல் காந்தி டெல்லி புறப்பட்டுச் சென்றார். முன்னதாக ராகுல் காந்தி மற்றும் அவருடன் சேர்த்துக் கைது செய்யப்பட்ட திக்விஜய் சிங், ரீட்டா பகுகுணா, ராஜ் பாப்பர் உள்ளிட்டோர் கஸ்னா சிறையில் அடைக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications